Advertisement

இன்றைய தங்கம் விலை நிலவரம் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்

By: vaithegi Thu, 11 May 2023 12:30:23 PM

இன்றைய தங்கம் விலை நிலவரம் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்

சென்னை: தமிழகத்தில் தங்கம் விலையானது ஏற்றத்தாழ்வுகளுடன் இருந்து வருகிறது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்து கொண்டே வருவதால் நகை வாங்க பலர் தயக்கம் காட்டினர். இந்நிலையில் நேற்று தங்கம் விலை அதிகரித்து ரூ. 5742க்கு விற்பனை செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து இன்றும் எந்தவித மாற்றமும் இன்றி கிராம் ரூ. 5742க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதனால் நகை வாங்க நினைப்பவர்கள் நிம்மதி அடைந்து இருக்கின்றனர். கடந்த வாரம் தங்கம் ரூ. 46000க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போதும் 46000 ரூபாயை நெருங்கி கொண்டிருக்கிறது

gold price,sale ,தங்கம் விலை ,விற்பனை

இந்த நிலையில் இன்று ஒரு சவரன் தங்கம் ரூ.45,936க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலை கிராமுக்கு 70 காசுகள் குறைந்து 1 கிராம் வெள்ளி ரூ.82.00 எனவும், 1 கிலோ வெள்ளி ரூ.82,000 எனவும் விற்பனை செய்யப்படுகிறது.

இதனை அடுத்து அதிகரித்து கொண்டே இருக்கும் தங்கம் இன்று எந்தவித மாற்றமும் இல்லாமல் இருப்பது நகைப்பிரியர்கள் மத்தியில் சற்று நிம்மதி அடைய செய்துள்ளது.

Tags :