- வீடு›
- வணிகம் or வர்த்தகம்›
- இன்றைய ஆபரணத் தங்கத்தின் விலை என்ன என்று பார்ப்போம்
இன்றைய ஆபரணத் தங்கத்தின் விலை என்ன என்று பார்ப்போம்
By: vaithegi Thu, 06 July 2023 12:14:35 PM
சென்னை: பங்கு சந்தையில் ஏற்படும் ஏற்றுமதி, இறக்குமதி காரணத்தினால் தங்கத்தின் விலையில் தொடர்ந்து மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு வரை தொடர்ந்து தங்கத்தின் விலை குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் நாளுக்கு நாள் உயர துவங்கி இருக்கிறது.
மேலும், வார இறுதி நாட்களில் கூடுதலாக தங்கத்தின் விலை உயர்ந்து பொதுமக்களின் மத்தியில் அதிர்ச்சியை கிளப்பி வருகிறது. இந்த நிலையில், நேற்று சென்னையில் 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.8 அதிகரித்து ரூ. 5460க்கும், சவரனுக்கு ரூ.54 அதிகரித்து ரூ.43,680 க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
மேலும், சென்னையில் நேற்று வெள்ளியின் விலை கிராமுக்கு 75.80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது இன்றைய தங்க விலை பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.
அதாவது, சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை எவ்வித மாற்றமும் இல்லாமல் 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 5460 ரூபாய்க்கும், சவரனுக்கு ரூ.43,680க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், வெள்ளியின் விலை கிராமுக்கு 90 காசுகள் அதிகரித்து ரூ.76.70 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.