Advertisement

நேற்றை விட இன்று எந்த காய்கறி விலை அதிகரித்து இருக்கிறது என்பது பற்றி பார்ப்போமாம்

By: vaithegi Wed, 18 Oct 2023 12:35:59 PM

நேற்றை விட இன்று எந்த காய்கறி விலை அதிகரித்து இருக்கிறது என்பது பற்றி பார்ப்போமாம்

சென்னை: இன்றைய காய்கறி விலை நிலவரம் ...தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்களில் ஒன்றான காய்கறி விலையானது தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்து கொண்டு வருகிறது. கடந்த மாதம் புரட்டாசி என்பதால் விலை சற்று அதிகரித்தது.

இதையடுத்து நேற்றுடன் புரட்டாசி முடிந்ததால் விலை இன்று குறையும் என்று மக்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர். அந்த வகையில் இன்று வெளியான விலை பட்டியலில் அவரைக்காய் ரூ.80 க்கும், பீன்ஸ் ரூ.85க்கும், பீட்ரூட் ரூ.35க்கும், கத்திரிக்காய் ரூ. 30க்கும், முட்டைகோஸ் ரூ. 12க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

vegetable prices and sales , காய்கறி விலை ,விற்பனை

மேலும் குடைமிளகாய் ரூ.40க்கும், கேரட் ரூ.30க்கும், சவ்சவ் ரூ.20க்கும், தேங்காய் ரூ.28க்கும், பூண்டு ரூ.180க்கும், பச்சை மிளகாய் ரூ.30க்கும், கோவக்காய் ரூ.30க்கும், வெண்டைக்காய் ரூ.30க்கும், வெங்காயம் ரூ.90க்கும்,

இதனை அடுத்து உருளைக்கிழங்கு ரூ.30க்கும், தக்காளி ரூ.24க்கும், பூசணிக்காய் ரூ.20க்கும், இஞ்சி ரூ.240க்கும், சேனைக்கிழங்கு ரூ.44க்கும், முள்ளங்கி ரூ.70க்கும், சுரைக்காய் ரூ.20க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Tags :