Advertisement

எல்ஜி நிறுவனத்தின் இரட்டை ஸ்கிரீன் கொண்ட விங் ஸ்மார்ட்போன் அறிமுகம்!

By: Monisha Wed, 16 Sept 2020 4:55:05 PM

எல்ஜி நிறுவனத்தின் இரட்டை ஸ்கிரீன் கொண்ட விங் ஸ்மார்ட்போன் அறிமுகம்!

எல்ஜி நிறுவனம் இரட்டை ஸ்கிரீன் கொண்ட விங் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போனில் 6.8 இன்ச் P-OLED ஃபுல்விஷன் ஸ்கிரீன், 3.9 இன்ச் FHD+ இரண்டாவது ஸ்கிரீன் சுழலும் வசதியுடன் வழங்கப்படுகிறது. இதனால் இரே சமயத்தில் இரண்டு ஸ்கிரீன்களையும் பயன்படுத்த முடியும்.

இரண்டு ஸ்கிரீன் கொண்ட விங் ஸ்மார்ட்போன் உறுதித்தன்மையை எல்ஜி சுமார் 2 லட்சம் முறை சோதனை செய்ததாக தெரிவித்து இருக்கிறது. இதன் மல்டி ஆப் மோட் கொண்டு இரு செயலிகளை ஒவ்வொரு திரையில் ஒரே சமயத்தில் பயன்படுத்த முடியும்.

எல்ஜி விங் ஸ்மார்ட்போன் அரோரா கிரே மற்றும் இல்யூஷன் ஸ்கை நிறங்களில் கிடைக்கிறது. முதற்கட்டமாக இதன் விற்பனை தென் கொரியாவில் துவங்கி அதன் பின் அக்டோபர் மாத வாக்கில் வட கொரியா மற்றும் ஐரோப்பாவில் வெளியாகிறது.

lg company,dual screen,wing,smartphone,multi mode ,எல்ஜி நிறுவனம்,இரட்டை ஸ்கிரீன்,விங்,ஸ்மார்ட்போன்,மல்டி மோட்

எல்ஜி விங் சிறப்பம்சங்கள்
- 6.8 இன்ச் 2440×1080 பிக்சல் FHD+ 20.5: 9 P-OLED டிஸ்ப்ளே
- 3.9 இன்ச் 1240x1080 பிக்சல் 1.15:1 G-OLED இரண்டாவது ஸ்கிரீன்
- ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 765ஜி பிராசஸர்
- அட்ரினோ 620 ஜிபியு
- 8 ஜிபி ரேம்
- 128 ஜிபி / 256 ஜிபி மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 10
- 64 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.8, OIS
- 13 எம்பி 117° அல்ட்ரா வைடு லென்ஸ், f/1.9
- 12 எம்பி 120° அல்ட்ரா வைடு கிம்பல் மோட் கேமரா, f/2.2
- 32 எம்பி பாப்-அப் செல்ஃபி கேமரா, f/1.9
- இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- யுஎஸ்பி டைப் சி ஆடியோ
- 5ஜி SA/ NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1
- யுஎஸ்பி டைப்-சி
- 4000 எம்ஏஹெச் பேட்டரி
- குவிக் சார்ஜ் 4.0
- 25 ஃபாஸ்ட் சார்ஜிங்

Tags :
|