Advertisement

எல்ஜி நிறுவனம் புதிதாக ரோலபிள் லேப்டாப் மாடலை உருவாக்கி வருவதாக தகவல்

By: Karunakaran Mon, 23 Nov 2020 12:44:36 PM

எல்ஜி நிறுவனம் புதிதாக ரோலபிள் லேப்டாப் மாடலை உருவாக்கி வருவதாக தகவல்

எல்ஜி நிறுவனம் புதிதாக ரோலபிள் லேப்டாப் மாடலை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 17 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட ரோலபிள் லேப்டாப் மாடலை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. இந்த லேப்டாப் மடிக்கக்கூடிய கீபோர்டு மற்றும் டச்பேட் கொண்டிருக்கும் என தெரிகிறது.

இருப்பினும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. ஆனாலும் ரோபலிள் லேப்டாப் விவரங்கள் காப்புரிமை விண்ணப்பத்தில் இருந்து வெளியாகி இருக்கிறது. புதிய ரோலபிள் லேப்டாப் 13.3 இன்ச் முதல் 17 இன்ச் வரையிலான அளவுகளில் அன்ரோல் ஆகும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கின்றன.

lg,new rollover,laptop model,17inch-rollable ,எல்ஜி, புதிய ரோல்ஓவர், லேப்டாப் மாடல், 17 இன்ச்-ரோலபிள்

இந்த லேப்டாப்களின் பக்கவாட்டில் பவர் பட்டன் வழங்கப்பட்டு இருக்கிறது. ரோல் செய்யப்பட்ட நிலையில், லேப்டாப்பில் இருக்கும் வெப்கேமரா மறைந்து கொள்கிறது. மேலும் இந்த லேப்டாப்புடன் வழங்கப்படும் கீபோர்டு மற்றும் டச்பேட் பாதியாக மடிக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

ரோலபிள் லேப்டாப் பற்றி எல்ஜி சார்பில் இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வழங்கப்படவில்லை. அந்த வகையில் இது வெறும் கான்செப்ட் ஆக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஒருவேளை ரோலபிள் லேப்டாப் உருவாக்க திட்டமிடப்பட்டு வரலாம் என்று கருதப்படுகிறது.

Tags :
|