Advertisement

எல்ஜி நிறுவனத்தின் LG Q31 என்ற ஸ்மார்ட்போன் கொரியாவில் அறிமுகம்

By: Nagaraj Sat, 19 Sept 2020 3:21:57 PM

எல்ஜி நிறுவனத்தின் LG Q31 என்ற ஸ்மார்ட்போன் கொரியாவில் அறிமுகம்

எல்ஜி நிறுவனம் தற்போது LG Q31 என்ற ஸ்மார்ட்போனை கொரியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த LG K31 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளது.

எல்ஜி Q31 ஸ்மார்ட்போன் 5.7 இன்ச் எச்டி பிளஸ் கொண்ட 720 x 1520 பிக்சல்கள் தீர்மானம் மற்றும் 18.9: 9 விகித நாட்ச் ஃபுல்விஷன் டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது.

மேலும் இது பின்புறம் கைரேகை ஸ்கேனர் கொண்டுள்ளது. மெமரி அளவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டர்னல் மெமரி கொண்டுள்ளது.

introducing the lg q31 smartphone,micro usb port,gps ,
எல்ஜி Q31 ஸ்மார்ட்போன், மைக்ரோ யுஎஸ்பி போர்ட், ஜிபிஎஸ், அறிமுகம்

மேலும் ஆக்டா கோர் மீடியாடெக் MT6762 பிராசஸர் வசதி கொண்டதாகவும், மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வழியாக 1 டிபி வரை சேமிப்பும் வழங்கப்பட்டுள்ளது. கேமராவினைப் பொறுத்தவரை பின்பக்கத்தில் 13 மெகாபிக்சல் சென்சார் மற்றும் 5 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் சென்சார் முன்பக்கத்தில் 5 மெகாபிக்சல் கொண்ட செல்ஃபி ஷூட்டர் கேமராவைக் கொண்டுள்ளது.

பேட்டரி அளவினைப் பொறுத்தவரை, 3000 எம்ஏஎச் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு 10 இல் இயங்குதளத்தினைக் கொண்டுள்ளது. இணைப்பு முன்னணியில், இது 4 ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத் 5.0, மைக்ரோ யுஎஸ்பி போர்ட், ஜிபிஎஸ் / க்ளோனாஸ் மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Tags :