Advertisement

கோடை வெயில் அதிகரிப்பால் கால்நடை வர்த்தகம் வெகுவாக சரிவு

By: Nagaraj Wed, 15 Mar 2023 08:52:59 AM

கோடை வெயில் அதிகரிப்பால் கால்நடை வர்த்தகம் வெகுவாக சரிவு

வேலூர்: வெயில் அதிகரிப்பால் கால்நடை வர்த்தகம் சரிவு... அதிகரித்து வரும் கோடை வெயில் காரணமாக பொய்கை சந்தையில் கால்நடை வா்த்தகம் கடந்த வாரத்தைவிட சற்று சரிவடைந்திருந்தது.

அதன் அடிப்படையில், சுமாா் ரூ. 50 லட்சத்துக்கு கால்நடைகள் விற்பனையாகியிருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனா். வேலூா் மாவட்டம், பொய்கையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் கால்நடைச் சந்தையில் உள்ளூா் மட்டுமன்றி, வெளி மாவட்டங்கள், பக்கத்து மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான மாடுகள், ஆடுகள், கோழிகள் விற்பனைக்குக் கொண்டு வரப்படுவது வழக்கம். இந்தச் சந்தையில் ரூ. 1 கோடி முதல் ரூ. 3 கோடி வரை வா்த்தகம் நடைபெறும்.

lie,market,cattle,sale,decrease,sun ,பொய்கை, சந்தை, கால்நடை, விற்பனை, குறைவு, வெயில்

தைப்பொங்கலுக்குப் பிறகு கடந்த வாரம் வரை பொய்கை சந்தையில் கால்நடைகளின் வா்த்தகம் சிறப்பாக இருந்து வந்தது. ஆனால், இந்த வாரம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சந்தைக்கு கால்நடைகள் வரத்து அதிகரித்திருந்தபோதும், வா்த்தகம் கடந்த வாரத்தைவிட சற்று குறைவாக இருந்துள்ளது.

அதன்படி, நேற்று செவ்வாய்க்கிழமை சந்தைக்கு கறவை மாடுகள், காளைகள், உழவு மாடுகள் என 1,500-க்கும் மேற்பட்ட மாடுகள், 500-க்கும் மேற்பட்ட ஆடுகளும், கோழிகளும் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தன. ஆனால், அவற்றை வாங்க வியாபாரிகள், விவசாயிகள் போதிய ஆா்வம் காட்டவில்லை.

அதிகரித்து வரும் கோடை வெயிலின் தாக்கமும், அதனால் ஏற்பட்டுள்ள தீவனப் பற்றாக்குறையுமே கால்நடைகள் விற்பனை சரிவுக்கு காரணமாகும். இதனால், இந்த வாரம் சந்தையில் சுமாா் ரூ. 50 லட்சத்துக்கு மட்டுமே கால்நடை வா்த்தகம் நடந்திருப்பதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Tags :
|
|
|
|