Advertisement

இந்திய விற்பனையில் புதிய மைல்கல் எட்டிய மாருதி சுசுகி நிறுவனம்!

By: Monisha Mon, 24 Aug 2020 6:45:39 PM

இந்திய விற்பனையில் புதிய மைல்கல் எட்டிய மாருதி சுசுகி நிறுவனம்!

மாருதி சுசுகி நிறுவனம் தனது எக்ஸ்எல்6 பிரீமியம் எம்பிவி மாடல் இந்திய விற்பனையில் 25 ஆயிரம் யூனிட்களை கடந்து இருப்பதாக தெரிவித்து உள்ளது. எக்ஸ்எல்6 எம்பிவி மாடல் மாருதி சுசுகி நிறுவனத்தின் எம்பிவி வாகனங்கள் விற்பனையை 51 சதவீதமாக உயர்த்தி இருக்கிறது.

குறிப்பாக இந்திய சந்தையில் மாருதி சுசுகி எக்ஸ்எல்6 மாடல் சுமார் 14 சதவீத பங்குகளை கொண்டிருக்கிறது. மாருதியின் எக்ஸ்எல்6 இந்திய சந்தையில் முதல் ஆண்டு நிறைவை இத்தகைய மைல்கல் விற்பனையுடன் நிறைவு செய்து இருக்கிறது.

india,sales,maruti suzuki,xl6 premium mpv ,இந்தியா,விற்பனை,மாருதி சுசுகி,எக்ஸ்எல்6 பிரீமியம் எம்பிவி

புதிய எக்ஸ்எல்6 மாடலில் பிஎஸ்6 ரக கே15 பெட்ரோல் என்ஜின் மற்றும் ஸ்மார்ட் ஹைப்ரிட் தொழில்நுட்பம் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 104 பிஹெச்பி பவர், 138 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 4 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது.

மாருதி சுசுகி எக்ஸ்எல்6 மாடல்- மெட்டாலிக் பிரீமியம் சில்வர், மெட்டாலிக் மேக்மா கிரே பிரைம் ஆபன் ரெட், பியல் பிரேவ் காக்கி, பியல் ஆர்க்டிக் வைட் மற்றும் நெக்சா புளூ என ஆறுவித நிறங்களில் கிடைக்கிறது.

Tags :
|
|