Advertisement

விற்பனையில் ஒரு லட்சம் யூனிட்களை கடந்த மாருதி சுசுகி எஸ் சிஎன்ஜி கார்கள்!

By: Monisha Mon, 08 June 2020 4:04:38 PM

விற்பனையில் ஒரு லட்சம் யூனிட்களை கடந்த மாருதி சுசுகி எஸ் சிஎன்ஜி கார்கள்!

சுசுகி நிறுவனத்தின் எஸ் சிஎன்ஜி கார் இந்திய விற்பனையில் ஒரு லட்சம் யூனிட்களை கடந்துள்ளது. முந்தைய நிதியாண்டில் மாருதி சுசுகி நிறுவனம் 1,06,443 எஸ் சிஎன்ஜி மாடல்களை விற்பனை செய்துள்ளது.

நிறுவனம் சார்பில் பொருத்தப்பட்ட சிஎன்ஜி கிட் கொண்ட வாகனங்களை அதிகம் விற்பனையான நிறுவனம் என்ற பெருமையை மாருதி சுசுகி பெற்று இருக்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் சிஎன்ஜி விற்பனையில் மாருதி சுசுகி நிறுவனம் 15.5 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது.

maruti suzuki,one lakh unit,sales,s cng,alto ,மாருதி சுசுகி,ஒரு லட்சம் யூனிட்,விற்பனை,எஸ் சிஎன்ஜி,ஆல்டோ

இந்தியாவில் காற்று மாசை குறைக்கும் திறன் கொண்ட வாகனங்களை ஊக்குவிக்க மாருதி சுசுகி நிறுவனம் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் மிஷன் கிரீன் மில்லியன் எனும் திட்டத்தை அறிவித்தது. இந்த திட்டத்தின கீழ் முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடும் போது அதிவேகமாக பத்து லட்சம் வாகனங்களை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மாருதி சுசுகி நிறுவனத்தின் ஆல்டோ, வேகன்ஆர், எர்டிகா மற்றும் ஈகோ போன்ற மாடல்களில் சிஎன்ஜி வேரியண்ட்களை வழங்கி வருகிறது.

Tags :
|
|