Advertisement

கார் உற்பத்தி நிறுவனங்கள் திறக்கப்பட்டு 50 சத ஊழியர்களுடன் மறு தொடக்கம்

By: Nagaraj Tue, 12 May 2020 9:12:54 PM

கார் உற்பத்தி நிறுவனங்கள் திறக்கப்பட்டு 50 சத ஊழியர்களுடன் மறு தொடக்கம்

கார் உற்பத்தி நிறுவனங்கள் உற்பத்தியை மறு தொடக்கம் செய்ய தொடங்கி உள்ளன.

மாருதி சுசூகி இந்தியா லிமிடெட் அதன் தொழிற்சாலைகளில் குறுகிய மாற்றங்களையும், அலுவலக ஊழியர்கள், விற்பனையாளர்கள் மற்றும் டீலர்ஷிப்களுக்கான கடுமையான பாதுகாப்புத் திட்டங்களையும் கொண்டிருக்கும்.

ஏனெனில் நாட்டில் மிகப்பெரிய கார் தயாரிப்பாளர் செவ்வாய்கிழமையன்று உற்பத்தியினை மறுதொடக்கம் செய்யத் தயாராகி வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

மாருதி அலுவலகங்கள் எந்த நேரத்திலும் பாதிக்கும் மேற்பட்ட ஊழியர்களை கொண்டிருக்கவில்லை என்றாலும், பொதுவாக கிருமி நீக்கம் செய்ய தொழில்சாலைகளில் மாற்றங்களுக்கு இடையே ஒரு மணி நேர இடைவெளி இருக்கும் என்றும் கூறியுள்ளது.


factories,reopening,car manufacturing,vehicle ,தொழிற்சாலைகள், மீண்டும் திறப்பு, கார் உற்பத்தி, வாகனம்

கொரோனா லாக்டவுன் காரணமாக ஒரு மாதங்களாக முடக்கப்பட்டிருந்த உற்பத்தியை தொடங்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் தொழில்சாலை வாயில்கள், கேண்டீன்கள், வாட்டர் கூலர்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் இரண்டு மீட்டர் இடைவெளியினை பின்பற்றுமாறும் மாருதி சுசூகி அதன் ஊழியர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதே போல வீட்டிலிருந்து பயணிக்கும் போதும் ஊழியர்கள் குறிப்பிட்ட வழிமுறைகளை பின்பற்றுமாறும் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. அதோடு ஒவ்வொரு ஊழியர்களும் பேஸ் மாஸ்க் மற்றும் சானிடைசர் உபயோகப்படுத்துவதும் கட்டாயம் என்றும் கூறியுள்ளது.

factories,reopening,car manufacturing,vehicle ,தொழிற்சாலைகள், மீண்டும் திறப்பு, கார் உற்பத்தி, வாகனம்

மாருதி சுசூகி மட்டும் அல்ல, ஹீண்டாய் மோட்டார் இந்தியா, டொயேட்டா கிர்லோஸ்கர் மோட்டார் இந்தியா, ஹீரோ மோட்டோர் கார்ப், ஐஷர் மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ராயல் என்பீல்டு, டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் போன்ற பல வாகன உற்பத்தியாளர்கள் இந்த மாதத்தில் தொழிற்சாலைகளை மீண்டும் திறந்துள்ளனர்.

Tags :