Advertisement

இந்திய சந்தையில் பட்ஜெட்டில் விலை களமிறங்கும் மைக்ரோமேக்ஸ்!

By: Monisha Fri, 19 June 2020 6:05:19 PM

இந்திய சந்தையில் பட்ஜெட்டில் விலை களமிறங்கும் மைக்ரோமேக்ஸ்!

மைக்ரோமேக்ஸ் நிறுவனம் விரைவில் மூன்று புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை இந்திய சந்தையில் விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இதில் ஒரு ஸ்மார்ட்போன் அதிநவீன தோற்றம் கொண்டிருக்கும் என்றும் இதில் பிரீமியம் அம்சங்கள் வழங்கப்படும் என்றும் இது பட்ஜெட் பிரிவில் அறிமுகமாகும் என்றும் கூறப்படுகிறது.

புதிய ஸ்மார்ட்போன் மாடல்கள் இந்தியர்களுக்காக இந்தியர்களால் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் மைக்ரோமேக்ஸ் இந்தியா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

indian market,budget price,micromax,smartphone ,இந்திய சந்தை,பட்ஜெட் விலை,மைக்ரோமேக்ஸ்,ஸ்மார்ட்போன்

மைக்ரோமேக்ஸ் நிறுவனம் மூன்று புதிய ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அடுத்த மாத வாக்கில் அறிமுகம் செய்யலாம் என்றும் இவை ரூ. 10 ஆயிரம் பட்ஜெட்டில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது.

'நாங்கள் கடுமையாக உழைத்து கொண்டிருக்கிறோம், விரைவில் மிகப்பெரிய சாதனத்தை வெளியிடுவோம். தொடர்ந்து இணைந்திருங்கள்' என மைக்ரோமேக்ஸ் நிறுவனம் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளது.

Tags :