Advertisement

மினி இந்தியா நிறுவனத்தின் புதிய கூப்பர் எடிஷன் அறிமுகம்!

By: Monisha Sat, 07 Nov 2020 8:08:37 PM

மினி இந்தியா நிறுவனத்தின் புதிய கூப்பர் எடிஷன் அறிமுகம்!

இந்திய சந்தையில் மினி இந்தியா நிறுவனம் புதிய கூப்பர் ஜெசிடபிள்யூ ஜிபி இன்ஸ்பையர்டு எடிஷனை அறிமுகம் செய்தது. புதிய ஸ்பெஷல் எடிஷன் கூப்பர் மாடல் விலை ரூ. 46.90 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

ஸ்பெஷல் எடிஷன் மாடல் ரேசிங் கிரெ மெட்டாலிக் நிறத்தில் கிடைக்கிறது. இந்தியாவில் ஸ்பெஷல் எடிஷன் வெறும் 15 யூனிட்களே விற்பனைக்கு வர இருக்கின்றன. இது சிபியு முறையில் கொண்டுவரப்படுகிறது.

indian market,mini india,cooper edition,glass black ,இந்திய சந்தை,மினி இந்தியா,கூப்பர் எடிஷன்,கிளாஸ் பிளாக்

தோற்றத்தில் இந்த மாடல் சற்று பிரம்மாண்டமாகவும், ஸ்போர்ட் தோற்றம் கொண்டிருக்கிறது. இதன் முன்புற கிரில், டோர் ஹேண்டில்கள், பியூவல் பில்லர் கேப், வெளிப்புறம் மற்றும் ஹெட்லைட், டெயில் லைட்களின் உள்புறம் கிளாஸ் பிளாக் இன்சர்ட்கள் வழங்கப்பட்டு உள்ளன.

புதிய மினி ஸ்பெஷல் எடிஷன் மாடலில் 2.0 லிட்டர், 4 சிலிண்டர் ட்வின் பவர்டு டர்போ என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 231 பிஹெச்பி பவர், 320 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஸ்டெப்டிரானிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது.

Tags :