Advertisement

மொபைல் போன் தயாரிப்பு 20 சதவீதம் சரிவடைந்து வருவதாக தகவல்

By: Nagaraj Thu, 27 Apr 2023 8:45:29 PM

மொபைல் போன் தயாரிப்பு 20 சதவீதம் சரிவடைந்து வருவதாக தகவல்

புதுதில்லி: மொபைல் போன் தயாரிப்பு சரிவு... நாட்டில் மொபைல் போன் தயாரிப்பு, ஆண்டுதோறும் 20 சதவீதம் அளவிற்கு சரிவடைந்து வருவதாக, தொழில்நுட்ப சந்தை ஆராய்ச்சி நிறுவனமான கவுண்டர்பாயின்ட் தெரிவித்துள்ளது.

ஆண்டுதோறும் மொபைல்போன் தயாரிப்பு 20 சதவீதம் அளவிற்கு குறைந்து வருவதுடன். பெரும்பாலான நிறுவனங்கள், தாங்கள் தயாரித்த மொபைல் போன்களை விற்க முடியாத நிலையில் இருந்து வருவதாக தெரிவித்துள்ளது.

மேலும், மொபைல் போன் தயாரிப்பு சரிவுக்கு, கடந்த ஆறு மாதங்களாக மொபைல் போன் விற்பனையில் ஏற்பட்ட சுணக்கமே காரணம் என துறைசார்ந்த வல்லநர்கள் கூறுகின்றனர்.

vulnerability,world,ongoing,mobile,production,decline ,பாதிப்பு, உலகம், தொடரும், மொபைல், உற்பத்தி, சரிவு

கடந்த ஆண்டு அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலாண்டில் மொபைல் போன் விற்பனை 30 சதவீதம் அளவிற்கு சரிந்துள்ளது. நடப்பாண்டில் ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் 18 சதவீதம் குறைந்துள்ளது.

இந்த பாதிப்பானது உலகம் முழுவதும் நிலவுவதாகவும், இன்னும் சில காலங்களுக்கு தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|
|