Advertisement

பெட்ரோல் & டீசல் விலை எப்போது குறையும் எதிர்பார்ப்பில் வாகன ஓட்டிகள்

By: vaithegi Wed, 13 Sept 2023 2:38:59 PM

பெட்ரோல் & டீசல் விலை எப்போது குறையும் எதிர்பார்ப்பில் வாகன ஓட்டிகள்


சென்னை: இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசலில் விலை உயர்வு வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாக்கியுள்ளது.எனவே இதன் விலை எப்போது குறையும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த பெட்ரோல் டீசலின் விலையை மத்திய அரசு உடனடியாக குறைக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் வந்த வண்ணம் உள்ளது. ஆனாலும் தற்போது வரை பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை.மேலும் கிட்டத்தட்ட 480வது நாளாக பெட்ரோல் டீசல் விலை எந்த வித மாற்றமின்றி நீடித்து வருகிறது.

petrol and diesel price ,பெட்ரோல் , டீசல் விலை


சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டர் ரூ.102.63 -க்கும் டீசல் ரூ.94.24 -க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இன்று டெல்லியில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்று வருகிறது.

இதையடுத்து இந்தக் கூட்டத்தில் முக்கிய பிரச்சினைகள் பற்றி ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. மேலும் அத்துடன் பெட்ரோல், டீசல் விலை குறித்து ஆலோசிக்கப்படலாம் என்றும் தகவல்கள் வந்துள்ளது.

Tags :