Advertisement

மோட்டோரோலா ஒன் பியூஷன் பிளஸ் மாடல் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம்!

By: Monisha Sat, 13 June 2020 10:06:06 AM

மோட்டோரோலா ஒன் பியூஷன் பிளஸ் மாடல் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம்!

ஐரோப்பிய சந்தையில் கடந்த வாரம் மோட்டோரோலா நிறுவனம் தனது ஒன் பியூஷன் பிளஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் தற்போது இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

மோட்டோரோலா நிறுவனம் வெளியிட்டுள்ள டீசரில் பாப் அப் கேமரா கொண்ட ஸ்மார்ட்போன் புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது. டீசர் புகைப்படத்தில் உள்ள ஸ்மார்ட்போன் இடதுபுறத்தில் பாப் அப் கேமரா கொண்டிருக்கிறது. அந்த வகையில் ஒன் பியூஷன் பிளஸ் மாடல் தான் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது என தெரியவந்துள்ளது.

motorola,one fusion plus,indian market,highlights ,மோட்டோரோலா,ஒன் பியூஷன் பிளஸ்,இந்திய சந்தை,சிறப்பம்சங்கள்

மோட்டோரோலா ஒன் பியூஷன் பிளஸ் மாடலின் சிறப்பம்சங்கள்
- 6.5 இன்ச் FHD+ டோட்டல் விஷன் டிஸ்ப்ளே
- ஸ்னாப்டிராகன் 730 பிராசஸர்
- 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி (மெமரியை நீட்டிக்கும் வசதி)
- பிளாஸ்டிக் பாடி மற்றும் கிளாசி ஃபினிஷ்
- வளைந்த எட்ஜ்
- கைரேகை சென்சார்
- 64 எம்பி பிரைமரி கேமரா
- 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா
- 5 எம்பி மேக்ரோ மற்றும் 2 எம்பி டெப்த் கேமரா
- 16 எம்பி செல்ஃபி கேமரா
- ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம்
- 5000 எம்ஏஹெச் பேட்டரி
- 15 வாட் டர்போ பவர் சார்ஜிங் வசதி

Tags :