Advertisement

மோட்டோரோலா ரேசர் 5ஜி மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் விபரங்கள் வெளியாகியது!

By: Monisha Wed, 26 Aug 2020 5:42:42 PM

மோட்டோரோலா ரேசர் 5ஜி மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் விபரங்கள் வெளியாகியது!

மோட்டோரோலா ரேசர் 5ஜி மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் 360 டிகிரி வீடியோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இதில் ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு விவரங்கள் தெரியவந்துள்ளது. புதிய தலைமுறை மோட்டோ மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் சற்றே பெரியதாக காட்சியளிக்கிறது. எனினும், இது பார்க்க முந்தைய ரேசர் போன் போன்றே தெரிகிறது.

புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனில் 5ஜி அம்சம் மிகப்பெரும் அப்கிரேடாக இருக்கும் என கூறப்படுகிறது. வீடியோவின் படி புதிய ரேசர் 5ஜி ஸ்மார்ட்போனின் நாட்ச்கள் மென்மையாக்கப்பட்டு கைரேகை சென்சார் நீக்கப்பட்டு இருக்கலாம் என தெரிகிறது.

இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி மோட்டோரோலா ரேசர் 5ஜி ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 765 பிராசஸர் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

motorola racer 5g,smartphone,processor,display,camera ,மோட்டோரோலா ரேசர் 5ஜி,ஸ்மார்ட்போன்,பிராசஸர்,டிஸ்ப்ளே,கேமரா

மேலும், இந்த மாடலில் 6.2 இன்ச் ஃபிளெக்சிபில் டிஸ்ப்ளே வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. முந்தைய ரேசர் மாடலில் ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. 5ஜி ரேசர் போனின் சிப்செட் புது வடிவமைப்பு மற்றும் கேமரா மாட்யூல் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

இத்துடன் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம், டூயல் சிம் வசதி, அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 256 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்படலாம் என தெரிகிறது. புகைப்படங்களை எடுக்க 5ஜி ரேசர் போனில் 48 எம்பி பிரைமரி கேமரா, 20 எம்பி இரண்டாவது கேமரா வழங்கப்படும் என கூறப்படுகிறது.

Tags :