Advertisement

புதிய கேலக்ஸி நோட் 20 சீரிஸ் ஆகஸ்ட் 28 ஆம் தேதி வெளியாகும்!

By: Monisha Tue, 11 Aug 2020 09:32:38 AM

புதிய கேலக்ஸி நோட் 20 சீரிஸ் ஆகஸ்ட் 28 ஆம் தேதி வெளியாகும்!

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 20 மற்றும் கேலக்ஸி நோட் 20 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போன்களின் வெளியீட்டு விவரம் அமேசானில் தெரியவந்துள்ளது. அதன்படி புதிய கேலக்ஸி நோட் 20 சீரிஸ் ஆகஸ்ட் 28 ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.

முன்னதாக கேலக்ஸி நோட் 20 மற்றும் கேலக்ஸி நோட் 20 அல்ட்ரா 5ஜி மாடல்களின் முன்பதிவு துவங்கப்பட்டது. முன்னதாக இவை 2020 கேலக்ஸி அன்பேக்டு விழாவில் அறிமுகம் செய்யப்பட்டன. சாம்சங் கேலக்ஸி நோட் 20 மாடல் துவக்க விலை ரூ. 77,999 முதல் துவங்குகிறது.

சாம்சங் கேலக்ஸி நோட் 20 அல்ட்ரா 5ஜி 256 ஜிபி மாடல் விலை ரூ. 104999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இரு ஸ்மார்ட்போன்களும் ஆகஸ்ட் 28 ஆம் தேதி அமேசானில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

samsung,galaxy note 20,amazon,smartphone ,சாம்சங் நிறுவனம்,கேலக்ஸி நோட் 20,அமேசான்,ஸ்மார்ட்போன்

கேக்ஸி நோட் 20 ஸ்மார்ட்போனினை முன்பதிவு செய்வோருக்கு ரூ. 7 ஆயிரம் மதிப்புள்ள பலன்களும், கேலக்ஸி நோட் 20 அல்ட்ரா 5ஜி மாடலை முன்பதிவு செய்வோருக்கு ரூ. 10 ஆயிரம் மதிப்புள்ள பலன்களும் வழங்கப்படுகிறது. இவ்வாறு முன்பதிவு செய்வோர் ஸ்மார்ட்போன்களை செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் வாங்க வேண்டும்.

பலன்களை வாடிக்கையாளர்கள் சாம்சங் ஷாப் செயலியில் கேலக்ஸி பட்ஸ் பிளஸ், கேலக்ஸி பட்ஸ் லைவ், கேலக்ஸி வாட்ச், கேலக்ஸி டேப் உள்ளிட்டவற்றை வாங்க பயன்படுத்திக் கொள்ள முடியும். இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்தி கேலக்ஸி நோட் 20 மாடலுக்கு ரூ.6 ஆயிரம் கேஷ்பேக், கேலக்ஸி நோட் 20 அல்ட்ரா 5ஜி மாடலை வாங்குவோருக்கு ரூ.9 ஆயிரம் கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

Tags :
|