Advertisement

சர்வதேச சந்தையில் புதிய ஹானர் ஸ்மார்ட்போன் ஜூன் 23 ஆம் தேதி அறிமுகம்

By: Monisha Wed, 17 June 2020 6:24:31 PM

சர்வதேச சந்தையில் புதிய ஹானர் ஸ்மார்ட்போன் ஜூன் 23 ஆம் தேதி அறிமுகம்

சந்தையில் ஹூவாயின் புதிய ஹானர் பிராண்டு அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஹானர் 9ஏ ஸ்மார்ட்போன் ஜூன் 23 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இதே ஸ்மார்ட்போன் ரஷிய சந்தையில் ஏப்ரல் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது.

ஹானர் 9ஏ ஸ்மார்ட்போன் பிளாக், புளூ மற்றும் கிரீன் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. ரஷியாவில் இதன் விலை 10990 ரூபிள், இந்திய மதிப்பில் ரூ. 12 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

international market,honor brand,honor 9a,smartphone,highlights ,சர்வதேச சந்தை,ஹானர் பிராண்டு,ஹானர் 9ஏ,ஸ்மார்ட்போன்,சிறப்பம்சங்கள்

ஹானர் 9ஏ சிறப்பம்சங்கள்
- 6.3 inch 1600x720 பிக்சல் HD+ 20:9 டிஸ்ப்ளே
- ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ பி22 பிராசஸர்
- IMG PowerVR GE8320 GPU
- 3GB ரேம்
- 64GB மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 10 மற்றும் மேஜிக் யுஐ 3.0.1
- டூயல் சிம் ஸ்லாட்
- 13MP பிரைமரி கேமரா, f/1.8, LED ஃபிளாஷ்
- 5MP அல்ட்ரா வைடு கேமரா, f/2.2
- 2MP டெப்த் கேமரா, f/2.4
- 8MP செல்ஃபி கேமரா, f/2.0
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- மைக்ரோ யுஎஸ்பி போர்ட்
- 5000mAh பேட்டரி

Tags :