- வீடு›
- வணிகம் or வர்த்தகம்›
- புதிய லாவா இசட்61 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்!
புதிய லாவா இசட்61 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்!
By: Monisha Thu, 09 July 2020 6:07:58 PM
இந்தியாவில் லாவா நிறுவனம் தனது புதிய இசட் சீரிஸ் ஸ்மார்ட்போனினை பட்ஜெட் பிரிவில் அறிமுகம் செய்து உள்ளது. புதிய லாவா இசட்61 ப்ரோ ஸ்மார்ட்போனில் 5.45 இன்ச் ஹெச்டி+ 18:9 டிஸ்ப்ளே, 1.6 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் பிராசஸர், 2 ஜிபி ரேம், 8 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
லாவா இசட்61 ப்ரோ ஸ்மார்ட்போன் மிட்நைட் புளூ மற்றும் ஆம்பர் ரெட் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் புதிய லாவா இசட்61 ப்ரோ ஸ்மார்ட்போன் விலை ரூ. 5774 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
லாவா இசட்61 ப்ரோ சிறப்பம்சங்கள்
- 5.45 இன்ச் 1440x720 பிக்சல் ஹெச்டி+2.5டி வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- 1.6 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் பிராசஸர்
- 2 ஜிபி ரேம்
- 16 ஜிபி மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு ஒஎஸ்
- டூயல் சிம்
- 8 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
- 5 எம்பி செல்ஃபி கேமரா
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- மைக்ரோ யுஎஸ்பி
- 3100 எம்ஏஹெச் பேட்டரி