Advertisement

புதிய நோக்கியா 43 இன்ச் அல்ட்ரா ஹெச்டி டிவி ஜூன் 4 ஆம் தேதி அறிமுகம்!

By: Monisha Mon, 01 June 2020 5:50:03 PM

புதிய நோக்கியா 43 இன்ச் அல்ட்ரா ஹெச்டி டிவி ஜூன் 4 ஆம் தேதி அறிமுகம்!

நோக்கியா பிராண்டின் கீழ் முதல் ஸ்மார்ட் டிவி மாடலிலை ப்ளிப்கார்ட் மற்றும் நோக்கியா நிறுவனங்கள் இணைந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் அறிமுகம் செய்தன. இதுதவிர நோக்கியா பிராண்டிங்கில் வெவ்வேறு அளவுகளில் புதிய ஸ்மார்ட் டிவி மாடல்களை தொடர்ந்து வெளியிடுவதாக அறிவித்து இருந்தது.

அதன்படி புதிய நோக்கியா 43 இன்ச் அல்ட்ரா ஹெச்டி டிவி ப்ளிப்கார்ட் தளத்தில் ஜூன் 4 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. புதிய நோக்கியா ஸ்மார்ட் டிவியில் ஜெபிஎல் சவுண்ட், டிடிஎஸ் ட்ரூ-சரவுண்ட் மற்றும் டால்பி ஆடியோ, டால்பி விஷன் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படுகின்றன.

nokia brand,43 inch ultra hd tv,june 4,flipkart ,நோக்கியா பிராண்ட்,43 இன்ச் அல்ட்ரா ஹெச்டி டிவி,ஜூன் 4,ப்ளிப்கார்ட்

இத்துடன் நோக்கியா 43 இன்ச் மாடலின் ஓரடங்களில் மிகமெல்லிய பெசல்கள் வழங்கப்பட்டுள்ளன. புதிய 43 இன்ச் நோக்கியா ஸ்மார்ட் டிவியில் ஆண்ட்ராய்டு 9 இயங்குதளம், கூகுளின் ஆண்ட்ராய்டு டிவி பிளே ஸ்டோர் மற்றும் பில்ட் இன் க்ரோம்காஸ்ட் போன்ற அம்சங்கள் வழங்கப்படுகின்றன.

இவை தவிர புதிய டிவியின் மற்ற அம்சங்கள் 55 இன்ச் மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய 43 இன்ச் நோக்கியா ஸ்மார்ட் டிவி மாடல் விலை ரூ. 35,000-க்குள் நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
|