Advertisement

செப்டம்பர் 1 முதல் புதிய நோக்கியா 5.3 ஸ்மார்ட்போன் விற்பனை!

By: Monisha Wed, 26 Aug 2020 5:54:00 PM

செப்டம்பர் 1 முதல் புதிய நோக்கியா 5.3 ஸ்மார்ட்போன் விற்பனை!

ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய நோக்கியா 5.3 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து உள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் 6.55 இன்ச் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் வழங்கப்பட்டு இருக்கிறது.

இத்துடன் 13 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்பி டெப்த் மற்றும் 2 எம்பி மேக்ரோ சென்சார் வழங்கப்பட்டு உள்ளது. பின்புறம் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் நோக்கியா 5.3 ஸ்மார்ட்போன் 4000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

நோக்கியா 5.3 ஸ்மார்ட்போன் சியான், சேண்ட் மற்றும் சார்கோல் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 13,999 என்றும் 6 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 15,499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை செப்டம்பர் 1 ஆம் தேதி துவங்குகிறது.

hmt global company,nokia 5.3,smartphone,processor ,ஹெச்எம்டி குளோபல் நிறுவனம்,நோக்கியா 5.3,ஸ்மார்ட்போன்,பிராசஸர்

நோக்கியா 5.3 சிறப்பம்சங்கள்
- 6.55 இன்ச் 720x1600 பிக்சல் ஹெச்டி பிளஸ் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர்
- அட்ரினோ 610 ஜிபியு
- 4 ஜிபி / 6 ஜிபி ரேம்
- 64 ஜிபி மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 10
- டூயல் சிம் ஸ்லாட்
- 13 எம்பி பிரைமரி கேமரா, f/1.8, எல்இடி ஃபிளாஷ்
- 5 எம்பி வைடு ஆங்கில் கேமரா
- 2 எம்பி டெப்த் சென்சார்
- 2 எம்பி மேக்ரோ சென்சார்
- 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0
- கைரேகை சென்சார்
- 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 4.2
- யுஎஸ்பி டைப்-சி
- 4000 எம்ஏஹெச் பேட்டரி
- 10 வாட் சார்ஜிங்

Tags :