Advertisement

புதிய போக்கோ சி3 ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம்!

By: Monisha Sat, 03 Oct 2020 6:30:36 PM

புதிய போக்கோ சி3 ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம்!

போக்கோ பிராண்டின் புதிய போக்கோ சி3 ஸ்மார்ட்போன் அக்டோபர் 6 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகிறது. இந்த ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கிறது. ஏற்கனவே வெளியான தகவல்களின் படி கடந்த ஜூன் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி 9சி ஸ்மார்ட்போன் போக்கோ சி3 பெயரில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய டீசர்களின் படி புதிய ஸ்மார்ட்போன் மூன்று பிரைமரி கேமராக்கள் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. மேலும் இது கேம் சேன்ஜராக இருக்கும் என போக்கோ டீசர்களில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

poco brand,poco c3,smartphone,redmi,game changer ,போக்கோ பிராண்டு,போக்கோ சி3,ஸ்மார்ட்போன்,ரெட்மி,கேம் சேன்ஜர்

இந்த ஸ்மார்ட்போனில் 6.53 இன்ச் எல்சிடி டாட் டிராப் நாட்ச் ஸ்கிரீன், 2.3 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இத்துடன் 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமரா மற்றும் 2 எம்பி டெப்த் சென்சார் வழங்கப்படலாம்.

இத்துடன் பின்புறம் கைரேகை சென்சார், 5000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படலாம் என தெரிகிறது. புதிய போக்கோ சி3 ஸ்மார்ட்போன் 4 ஜிபி + 64 ஜிபி வேரியண்ட்டில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
|