Advertisement

இந்திய சந்தையில் புதிய ரியல்மி ஸ்மார்ட் டிவி அறிமுகம்!

By: Monisha Sat, 26 Sept 2020 6:59:45 PM

இந்திய சந்தையில் புதிய ரியல்மி ஸ்மார்ட் டிவி அறிமுகம்!

இந்திய சந்தையில் ரியல்மி நிறுவனம் ரியல்மி ஸ்மார்ட் டிவி 55 இன்ச் மாடலை வெளியிட திட்டமிட்டு இருக்கிறது. இது உலகின் முதல் SLED 4கே ஸ்மார்ட் டிவி என ரியல்மி தெரிவித்து உள்ளது. இந்த தொழில்நுட்பத்தை ரியல்மி மற்றும் ஜான் ரூமேன்ஸ் இணைந்து உருவாக்கி இருக்கின்றன.

SLED டிஸ்ப்ளே தொழில்நுட்பம் கொண்ட ரியல்மி ஸ்மார்ட் டிவி 4கே 55 இன்ச் மாடல் டியுவி ரெயின்லேண்ட் லோ புளூ லைட் சான்று பெற்று இறுக்கிறது. OLED டிவிக்கள் தவிர இந்த சான்று பெற்ற ஒரே டிவி இது ஆகும்.

புதிய ரியல்மி டிவி மாடல் மற்ற ரக டிவிக்களை விட சிறப்பான அனுபவத்தை வழங்குவதோடு, கண்களுக்கும் பாதுகாப்பானது ஆகும். புதிய டிவியுடன் ரியல்மி தலைமை செயல் அதிகாரி மாதவ் சேத் நிற்கும் புகைப்படத்தை அவர் தனது ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.

அந்த வகையில் புதிய ஸ்மார்ட் டிவி மாடல் அக்டோபர் மாத துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :