Advertisement

புதிய ரியல்மி ஸ்மார்ட் டிவி மாடல்கள் இந்தியாவில் அறிமுகம்!

By: Monisha Tue, 26 May 2020 5:35:38 PM

புதிய ரியல்மி ஸ்மார்ட் டிவி மாடல்கள் இந்தியாவில் அறிமுகம்!

இந்தியாவில் ரியல்மி பிராண்டு, புதிய ரியல்மி ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. இவை 43 இன்ச் ஃபுல் ஹெச்டி மற்றும் 32 இன்ச் ஹெச்டி ரெடி மாடல்களில் கிடைக்கின்றன.

இரு மாடல்களிலும் க்ரோமா பூஸ்ட் பிக்ச்சர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. புதிய ரியல்மி ஸ்மார்ட் டிவி பெசல்-லெஸ் டிசைன் கொண்டிருக்கிறது. இத்துடன் நெட்ஃப்ளிக்ஸ், யூடியூப், பிரைம் வீடியோ மள்ளும் லைவ் சேனல் உள்ளிட்ட செயலிகள் பிரீ இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளது.

realme brand,smart tv models,43 inch full hd,android 9 operating system,speakers ,ரியல்மி பிராண்டு,ஸ்மார்ட் டிவி மாடல்கள்,43 இன்ச் ஃபுல் ஹெச்டி,ஆண்ட்ராய்டு 9 இயங்குதளம்,ஸ்பீக்கர்கள்

ஆண்ட்ராய்டு 9 இயங்குதளம் கொண்டிருக்கும் ரியல்மி டிவி மாடல்களில் பில்ட் இன் க்ரோம் காஸ்ட் கொண்டிருக்கிறது. இதனுடன் வழங்கப்படும் ரிமோட் யூடியூப், நெட்ஃப்ளிக்ஸ், பிரைம் வீடியோ, கூகுள் அசிஸ்டண்ட் உள்ளிட்ட சேவைகளுக்கு ஷார்ட்கட் பட்டன்களை கொண்டிருக்கிறது.

மேலும் 24 வாட் அவுட்புட் வழங்கும் ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 1.1 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் கார்டெக்ஸ் ஏ53 மீடியாடெக் பிராசஸர், மாலி 470 எம்பி3 GPU, 1 ஜிபி ரேம், 8 ஜிபி மெமரி கொண்டிருக்கிறது. கனெக்டிவிட்டிக்கு வைபை, ப்ளூடூத் 5, 3 x ஹெச்டிஎம்ஐ, 2 x யுஎஸ்பி, SPDIF, டிவிபி டி2, ஈத்தர்நெட் போர்ட் வழங்கப்பட்டு இருக்கிறது.

Tags :