Advertisement

அன்டர்-டிஸ்ப்ளே கேமரா கொண்ட புது ரியல்மி ஸ்மார்ட்போன்!

By: Monisha Fri, 25 Sept 2020 5:58:13 PM

அன்டர்-டிஸ்ப்ளே கேமரா கொண்ட புது ரியல்மி ஸ்மார்ட்போன்!

ரியல்மி நிறுவனம் அன்டர்-டிஸ்ப்ளே கேமரா சென்சார் கொண்ட ஸ்மார்ட்போனினை உருவக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ரியல்மி துணை தலைவர் சூ கி சேஸ் புதிய மாடல் ஸ்மார்ட்போன் ஒன்றின் புகைப்படத்தை சீன சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

இந்த ஸ்மார்ட்போனின் முன்புறம் நாட்ச், பன்ச் ஹோல் என முன்புற கேமரா இருப்பதற்கான அறிகுறிகள் ஏதும் காணப்படவில்லை. அந்த வகையில், புகைப்படத்தில் இருப்பது அன்டர்-டிஸ்ப்ளே கேமரா கொண்ட ரியல்மி ஸ்மார்ட்போன் தான் என கூறப்படுகிறது.

ரியல்மி தவிர பல்வேறு இதர நிறுவனங்களும் அன்டர்-டிஸ்ப்ளே கேமரா தொழில்நுட்பத்தை உருவாக்கும் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. இந்த வரிசையில், ரியல்மி இணைந்திருக்கும் தகவல் தற்சமயம் வெளியாகி இருக்கிறது.

realme company,under display,camera sensor,smartphone ,ரியல்மி நிறுவனம்,அன்டர் டிஸ்ப்ளே,கேமரா சென்சார்,ஸ்மார்ட்போன்

சூ கி சேஸ், ரியல்மி துணை தலைவர் ஸ்மார்ட்போனின் புகைப்படத்தை வெளியிட்டதோடு, இந்த ஸ்மார்ட்போனில் பாப் அப் ரக கேமரா வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்து இருக்கிறார். முன்னதாக ரியல்மி இந்தியா தலைமை செயல் அதிகாரி, 5ஜி மாட்யூல் தடிமனாக இருப்பதால் பாப்-அப் கேமரா வழங்க முடியாது என தெரிவித்து இருந்தார்.

ஸ்மார்ட்போனின் புகைப்படத்தை மட்டும் பதிவிட்ட ரியல்மி அதிகாரி, அதன் அம்சங்கள் பற்றி எந்த தகவலையும் வழங்கவில்லை. எனினும், இந்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

Tags :