Advertisement

முட்டைகள் ஏற்றுமதிக்கு மலேசியா அரசு விதித்த புதிய கட்டுப்பாடு

By: Nagaraj Sun, 19 Feb 2023 12:17:17 PM

முட்டைகள் ஏற்றுமதிக்கு மலேசியா அரசு விதித்த புதிய கட்டுப்பாடு

நாமக்கல்: கோழிகளுக்கு நோய்த்தாக்குதல் இல்லை என சான்றிதழ் அளித்தால் மட்டுமே முட்டைகள் ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்படும் என மலேசிய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.

கோழி முட்டைகள் உற்பத்தியில் நாமக்கல் மாவட்டம் முன்னணியில் இருப்பது அனைவரும் அறிந்த விஷயம். இங்கிருந்து முட்டைகள் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி ஆகிறது.

சமீபத்தில் மலேசியாவிற்கும் முட்டைகள் ஏற்றுமதி ஆனது குறித்து பண்ணையாளர்கள் மகிழ்ச்சியுடன் இருந்தார்கள். இந்த நிலையில் கோழிகளுக்கு நோய்த்தாக்குதல் இல்லை என சான்றிதழ் அளித்தால் மட்டுமே முட்டைகள் ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்படும் என மலேசிய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.

இதனால் அந்த மகிழ்ச்சியில் சிறிதளவு தொய்வு ஏற்பட்டுள்ளது. நாமக்கல் மண்டலத்தில் உள்ள கோழி பண்ணைகளில் தினமும் 6 கோடி முட்டைகள் உற்பத்தி ஆகிறது. இந்த முட்டைகள் தமிழக அரசின் சத்துணவு திட்டம் வெளி மாநிலங்கள், வெளிநாடுகளுக்கு செல்கிறது. இங்குள்ள கோழிப்பண்ணைகளில் தரமான முட்டை உற்பத்தி செய்யப்படுவதால் வெளிநாடுகளில் நாமக்கல் முட்டைகளின் தேவை அதிகரித்து வருகிறது.

namakkal,eggs,malaysia,advice,regulation,certification ,நாமக்கல், முட்டைகள், மலேசியா, ஆலோசனை, விதிமுறை, சான்றிதழ்

தற்போது நாமக்கலில் இருந்து மஸ்கட், பக்ரைன், கத்தார் சைபீரியா, துபாய், சிரியா, ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், மாலத்தீவு போன்ற நாடுகளுக்கு மாதம் 8 கோடி முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. புதியதாக மலேசியாவிற்கு கடந்த டிசம்பரில் கண்டெயினர்களில் 10 லட்சம் முட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில் மலேசியா அரசாங்கம் நாமக்கல் முட்டைகளை இறக்குமதி செய்ய புதிய கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது. ஏற்றுமதி செய்யப்படும் முட்டைகள் உற்பத்தி செய்யப்படும் கோழிப் பண்ணைகளில் உள்ள கோழிகளுக்கு நோய் தாக்கங்கள் ஏதும் இல்லை என்று சான்றிதழ் அளிக்க வேண்டும். குறிப்பாக பவுல் காலரா, சால்மனலா பாக்டீரியா ஜஸ்ட் போன்ற மூன்று வகையான நோய் தாக்கத்தில் இல்லை என சான்றிதழ் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

நாமக்கல்லில் இருந்து மலேசியாவுக்கு முட்டை ஏற்றுமதி நிறுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் நாமக்கல்லில் முட்டை ஏற்றுமதியாளர்கள் சங்கம் அகில இந்திய முட்டை ஏற்றுமதியாளர்கள் சமயலகம் ஆகியவை இணைந்து ஏற்றுமதியில் உள்ள சிக்கல்களை களைவது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியது.

இதில் எக்ஸ்போர்ட் ஆய்வு அமைப்பினர், கால்நடை. மருத்துவக் கல்லூரி முதல்வர்கள் ஒன்றிய அரசின் கால்நடை துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சான்றிதழ் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

Tags :
|
|