Advertisement

வாட்ஸ் அப் செயலியின் புது அப்டேட்

By: vaithegi Sat, 26 Nov 2022 6:22:25 PM

வாட்ஸ் அப் செயலியின் புது அப்டேட்

இந்தியா: புது அப்டேட் .... நவீன வசதிகள் அதிகரிக்க அதிகரிக்க மக்களுக்கு தேவையான செயல்பாடுகள் அனைத்தும் எளிதாகி கொண்டு வருகிறது. மக்கள் தங்களின் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் செய்திகளை பரிமாறிக் கொள்ள அதிகமாக வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்திக் கொள்கின்றனர்.

இதனை அடுத்து முன்னதாக அதிக அளவிலான கட்டுப்பாடுகள் செயலியில் இருந்த நிலையில், தற்போது பயனர்களின் வசதிக்காக அதிக அளவிலான அம்சங்கள் கூடுதலாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

whatsapp,process ,வாட்ஸ் அப்,செயலி

சமீபத்தில் தான் வாட்ஸ் அப்பின் ஆண்டிராய்டு பயனர்களுக்காக ஸ்டேட்டஸில் வாய்ஸ் ரெக்கார்டு அம்சம் கொண்டு வரப்பட்டது. இந்த வசதி அப்போது ios பயனர்களுக்கு கிடைக்கவில்லை. ஆனால் தற்போது வாட்ஸ்அப் IOS பயனர்களுக்காகவும் இந்த அம்சத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது.

மேலும் வாய்ஸ் ரெக்கார்டு அல்லது வாய்ஸ் நோட்ஸ் ஆனது மொத்தம் 30 வினாடிகள் வரை ஸ்டேட்டஸில் வைத்துக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :