Advertisement

சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

By: Nagaraj Sun, 01 Oct 2023 9:31:44 PM

சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

சென்னை: பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப, உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலையை, தினமும் நிர்ணயம் செய்கின்றன.

ரஷ்யா - உக்ரைன் நாடுகளுக்கு இடையில் நிலவும் போர் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. சென்னையில் மே 21 வரையில் நீண்ட நாட்களாக பெட்ரோல் 110.85 ரூபாய், டீசல் 100.94 ரூபாய் விலையில் எந்த மாற்றமும் இன்றி அதே விலையில் நீடித்து வந்தது.

petrol price,no change,diesel,sale,chennai ,பெட்ரோல் விலை, மாற்றமில்லை, டீசல், விற்பனை, சென்னை

இந்நிலையில் மத்திய அரசு பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 9 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு 7.50 ரூபாயும் குறைக்கப்படும் என அறிவித்தது. அதனை தொடர்ந்து சென்னையில் பெட்ரோல் ரூ.8.22 காசு குறைந்து 102.63 ரூபாய்க்கும், டீசல் ரூ.6.70 காசு குறைந்து 94.24 ரூபாய் விலையில் விற்பனை செய்யப்பட்டது.

இன்று (அக்.,01)) 498-வது நாளாக பெட்ரோல் ரூ.102.63க்கும் டீசல் ரூ.94.24க்கும் விலை மாற்றம் இல்லாமல் அதே விலையில் விற்பனையாகின்றது.

Tags :
|
|