Advertisement

தக்காளி வரத்து அதிகரிப்பால் விலையில் மாற்றமில்லை

By: Nagaraj Sun, 06 Aug 2023 7:00:17 PM

தக்காளி வரத்து அதிகரிப்பால் விலையில் மாற்றமில்லை

சென்னை: விலை மாற்றமில்லை... சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் ஒரு கிலோ நாட்டுத் தக்காளியின் விலை மாற்றமின்றி ரூ.100க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தக்காளி ரூ.120க்கு விற்பனை செய்யப்படுகிறது. மதுரை மாட்டுத்தாவணி காய்கறி சந்தையில் தக்காளியின் விலை ஒரு கிலோவுக்கு ரூ.20 குறைந்து ரூ.80 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஒரு மாதமாக தக்காளி விலை ஒரு கிலோ ரூ. 200-க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

tomato,price per kg,rs.100,sale,koyambedu market,supply ,தக்காளி, கிலோ விலை, ரூ.100, விற்பனை, கோயம்பேடு சந்தை, வரத்து

இதன் விளைவாக பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகினா். தமிழக அரசு தக்காளி விலை உயா்வை கட்டுப்படுத்தும் முயற்சியாக நியாயவிலைக் கடைகள், 67 பண்னை பசுமைக் கடைகள் மூலமாக தக்காளி கிலோ ரூ. 60-க்கு விற்பனை செய்து வருகிறது.

இந்நிலையில், ஆக.2-ம் தேதி முதல் கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து அதிகரிக்கத் தொடங்கியது. இதனால் படிப்படியாக விலை குறைந்து வந்த நிலையில் இன்று(ஆக.6) ஒரு கிலோ நாட்டுத் தக்காளி ரூ.100க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags :
|
|
|