Advertisement

சீட்டு நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி வேண்டாம்..

By: Monisha Tue, 12 July 2022 7:45:42 PM

சீட்டு நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி வேண்டாம்..

சீட்டு நிறுவனங்களுக்கு 18% ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது.இந்த வரி விதிப்பு சீட்டு கம்பெனிகளால் பயன்பெறும் பொதுமக்களுக்கு தான் பெரும் சுமையாக அமையும் எனவும், 18 சதவிகித ஜிஎஸ்டி வரியை முழுவதுமாக தளர்த்த வேண்டும் எனவும் மதுரை ராமநாதபுரம் மாவட்ட சீட்டு கம்பெனிகள் சங்கத்தின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

மதுரை மாட்டுத்தாவணி எதிரே உள்ள மதுரை செய்தியாளர்கள் அரங்கத்தில் மதுரை ராமநாதபுரம் மாவட்ட சீட்டு கம்பெனிகள் சங்கம் சார்பில் சங்கத்தின் நிர்வாகிகள் பரத் சிங், வேல்முருகன், புருஷோத்தமன் உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்தனர்அப்போது அவர்கள் பேசியபோது, “வங்கிகளில் நிதி உதவி கிடைக்கப்பெறாத மக்கள், பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் தங்களுடைய தொழில் துவங்குவதற்கும் தொழிலை மேம்படுத்துவதற்கும் சீட்டு கம்பெனிகளில் ஏலச்சீட்டுகள் மாத குலுக்கள் சீட்டுகள் போன்ற சீட்டுகளில் சேர்ந்து தங்களது பொருளாதார தேவையை பூர்த்தி செய்து கொள்கின்றனர்.

goods,services,tax,lottery ,சீட்டு,நிறுவனம்,மக்கள், பொருளாதாரம்,

இத்தகைய பொருளாதார சேவையை செய்து வரும் சீட்டு கம்பெனிகள் நடத்தும் சீட்டு நிதியங்களின் மீதான ஜிஎஸ்டி வரியை அரசு 18 சதவிகிதமாக உயர்த்தி இருக்கிறது. இந்த ஜிஎஸ்டி வரி உயர்வு முழுவதுமாக பொதுமக்களை மட்டுமே பாதிக்கும். ஆகவே இதை முழுவதுமாக நீக்க வேண்டும்.

மேலும் அங்கீகாரம் பெறாத சீட்டு கம்பெனிகள் பல மோசடிகள் செய்கின்றன. அங்கீகாரம் பெறாத சீட்டு கம்பெனிகளில் முதலீடு செய்பவர்களுக்கு இந்த ஜிஎஸ்டி வரி கிடையாது.ஆனால் அவர்களிடம் மக்களின் பணத்திற்கு உத்தரவாதம் இருக்காது. ஆகவே அங்கீகாரம் பெற்ற சீட்டு கம்பெனிகளுக்கு இந்த ஜிஎஸ்டி வரி உயர்வை முழுவதுமாக தளர்த்த வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தனர்.

Tags :
|
|