Advertisement

நோக்கியா 125 ஸ்மார்ட் போன் சீனாவில் அறிமுகம்

By: Nagaraj Sat, 29 Aug 2020 11:59:57 AM

நோக்கியா 125 ஸ்மார்ட் போன் சீனாவில் அறிமுகம்

நோக்கியா 125 ஸ்மார்ட் போன் அறிமுகம்...மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா 125 ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது.

நோக்கியா 125 டூயல் ஸ்மார்ட்போன் டிஸ்பிளேவினைப் பொறுத்தவரை 2.4 இன்ச் 240×320 பிக்சல் QVGA டிஸ்ப்ளேவினைக் கொண்டதாகவும் உள்ளது.

மேலும் மீடியாடெக் பிராசஸர் வசதியினைக் கொண்டதாகவும், மேலும் நோக்கியா சீரிஸ் 30+ ஒஎஸ் இயங்குதளத்தினால் இயங்குவதாகவும் உள்ளது. மேலும் 4 எம்பி இன்டெர்னல் மெமரி வசதி கொண்டதாகவும், கேமராவினைப் பொறுத்தவரை விஜிஏ கேமரா, ஃபிளாஷ் வசதியினைக் கொண்டதாகவும் உள்ளது.

battery,dual sim facility,av connector,nokia ,பேட்டரி, டூயல் சிம் வசதி, ஏவி கனெக்டர், நோக்கியா

மேலும் கூடுதல் ஆதரவாக வயர்லெஸ் எஃப்எம் ரேடியோ மற்றும் டூயல் சிம் வசதியினைக் கொண்டுள்ளது. இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை மைக்ரோ யுஎஸ்பி, 3.5 எம்எம் ஏவி கனெக்டர் கொண்டுள்ளது.

மேலும் பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 1020 எம்ஏஹெச் பேட்டரி கொண்டுள்ளது. நோக்கியா 125 ஸ்மார்ட்போன் சார்கோல் பிளாக் மற்றும் பவுடர் வைட் நிறங்களினைக் கொண்டதாக உள்ளது.

Tags :