Advertisement

நோக்கியா 3.4 ஸ்மார்ட்போன் ஸ்விட்சர்லாந்தில் அறிமுகம்

By: Nagaraj Fri, 11 Sept 2020 08:44:14 AM

நோக்கியா 3.4 ஸ்மார்ட்போன் ஸ்விட்சர்லாந்தில் அறிமுகம்

நோக்கியாவின் புதிய அறிமுகம்... எச்எம்டி குளோபல் நிறுவனம் தற்போது நோக்கியா 3.4 ஸ்மார்ட்போனை ஸ்விட்சர்லாந்தில் அறிமுகம் வெளியிட்டு உள்ளது. இந்த நோக்கியா 3.4 ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

நோக்கியா 3.4 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுள்ளது, மேலும் மெமரி அளவினைப் பொறுத்தவரை 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியினைக் கொண்டுள்ளது.

nokia,smart phone,announcement,4000 mah battery ,நோக்கியா, ஸ்மார்ட் போன், அறிவிப்பு, 4000எம்ஏஎச் பேட்டரி

கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டுள்ளது. நோக்கியா 3.4 ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 13எம்பி பிரைமரி லென்ஸ், 2எம்பி செகன்டரி லென்ஸ், 5எம்பி சென்சார் போன்றவற்றினையும், மேலும் 8எம்பி செல்பீ கேமராவினையும் கொண்டுள்ளது.

மேலும் பேட்டரி அளவினைப் பொறுத்தவரை நோக்கியா 3.4 ஸ்மார்ட்போன் 4000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாக உள்ளது.

நோக்கியா 3.4 ஸ்மார்ட்போன் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 4 ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் வி 5.0, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், யூ.எஸ்.பி டைப்-சி, ஐஆர் பிளாஸ்டர் மற்றும் 3.5 ஆடியோ ஜாக் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Tags :
|