Advertisement

பன்ச் ஹோல் ஸ்கிரீனுடன் விரைவில் வருகிறது நோக்கியா 7.3 ஸ்மார்ட்போன்!

By: Monisha Sat, 26 Sept 2020 09:55:28 AM

பன்ச் ஹோல் ஸ்கிரீனுடன் விரைவில் வருகிறது நோக்கியா 7.3 ஸ்மார்ட்போன்!

ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா 2.4 மற்றும் நோக்கியா 3.4 ஸ்மார்ட்போன்களை சில நாட்களுக்கு முன் அறிமுகம் செய்தது. எனினும், நோக்கியா 7 சீரிஸ் அல்லது 9 சீரிஸ் பற்றி எந்த தகவலும் வழங்கப்படவில்லை.

இந்நிலையில், நோக்கியா 7.3 ஸ்மார்ட்போனின் ரென்டர்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன. இவை சிஏடி வரைபடங்களை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கின்றன. அளவில் இது 165.8x76.3x8.2எம்எம் அளவில் இருக்கிறது. இதன் பின்புறம் பிளாஸ்டிக் பேக் வழங்கப்படுகிறது.

punch hole,nokia 7.3,smartphone,display,hmt global ,பன்ச் ஹோல்,நோக்கியா 7.3,ஸ்மார்ட்போன்,டிஸ்ப்ளே,ஹெச்எம்டி குளோபல் நிறுவனம்

மேலும் புதிய ஸ்மார்ட்போன் பன்ச் ஹோல் ஸ்கிரீன், நான்கு கேமரா சென்சார்கள், பின்புறம் கைரேகை சென்சார், 3.5 எம்எம் ஆடியோ ஜாக் கொண்டிருக்கிறது. இத்துடன் 6.5 இன்ச் FHD+HDR பியூர் டிஸ்ப்ளே, 48 எம்பி பிரைமரி கேமரா, அல்ட்ரா வைடு, மேக்ரோ மற்றும் டெப்த் சென்சார்கள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

முன்புறம் 24 எம்பி செல்பி கேமரா வழங்கப்படும் என தெரிகிறது. மேலும் இது ஸ்னாப்டிராகன் 690 5ஜி பிராசஸர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் 4000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :