Advertisement

இந்திய சந்தையில் நோக்கியா சி3 ஸ்மார்ட்போன் செப்டம்பர் 17 முதல் விற்பனை!

By: Monisha Wed, 26 Aug 2020 09:45:38 AM

இந்திய சந்தையில் நோக்கியா சி3 ஸ்மார்ட்போன் செப்டம்பர் 17 முதல் விற்பனை!

ஹெச்எம்டி குளபோல் நிறுவனம் இந்திய சந்தையில் நோக்கியா சி3 ஸ்மார்ட்போனினை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய நோக்கியா சி3 மாடலில் 5.99 இன்ச் ஹெச்டி பிளஸ் ஸ்கிரீன், ஆக்டாகோர் யுனிசாக் பிராசஸர் வழங்கப்பட்டு உள்ளது.

இத்துடன் 8 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் வழக்கமான பெசல்கள் மற்றும் பின்புறம் கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 3040 எம்ஏஹெச் பேட்டரி, பக்கவாட்டில் எக்ஸ்பிரஸ் பட்டன் வழங்கப்பட்டு உள்ளது.

நோக்கியா சி3 ஸ்மார்ட்போன் நார்டிக் புளூ மற்றும் சேண்ட் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் 2 ஜிபி ரேம், 16 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 7499 என்றும் 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 8999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் விற்பனை செப்டம்பர் 17 ஆம் தேதி துவங்குகிறது.

indian market,nokia c3,smartphone,processor,express button ,இந்திய சந்தை,நோக்கியா சி3,ஸ்மார்ட்போன்,பிராசஸர்,எக்ஸ்பிரஸ் பட்டன்

நோக்கியா சி3 சிறப்பம்சங்கள்
- 5.99 இன்ச் 1440×720 பிக்சல் ஹெச்டி பிளஸ் 18:9 டிஸ்ப்ளே
- 1.6 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் யுனிசாக் பிராசஸர்
- ஐஎம்ஜி8322 ஜிபியு
- 2 ஜிபி ரேம், 16 ஜிபி மெமரி
- 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 10
- டூயல் சிம் ஸ்லாட்
- 8 எம்பி பிரைமரி கேமரா, f/2.0, எல்இடி ஃபிளாஷ்
- 5 எம்பி செல்ஃபி கேமரா, f/2.4
- கைரேகை சென்சார்
- 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 4.2
- மைக்ரோ யுஎஸ்பி போர்ட்
- 3040 எம்ஏஹெச் பேட்டரி

Tags :