Advertisement

முதல் முறையாக லோகோவை மாற்றிய நோக்கியா

By: vaithegi Mon, 27 Feb 2023 6:33:14 PM

முதல் முறையாக லோகோவை மாற்றிய நோக்கியா

இந்தியா: 60 ஆண்டுகளில் முதல் முறையாக லோகோவை மாற்றி அசத்தியுள்ளது நோக்கியா ... உலக புகழ்பெற்ற கீபேட் பட்டன் செல்போன் மற்றும் ஸ்மார்ட்போன் தயாரிக்கும் முன்னணி நிறுவனமான நோக்கியா கார்ப்பரேஷன் கடந்த 60 ஆண்டுகளில் முதல் முறையாக அதன் லோகோவை மாற்றி புதிய லோகோவை வெளியிட்டுள்ளது. ஸ்பெயினில் உள்ள பார்சிலோனாவில் நடைபெறும் எம்டபிள்யூசி 2023கண்காட்சியின் அதிகாரப்பூர்வ தொடக்கத்திற்கு முன்னதாக நோக்கியா நிறுவனம் தனது பிராண்டின் புதிய லோகோ அறிமுகப்படுத்தியது.

மேலும் அதனுடைய புதிய லோகோவில் வியக்கத்தகு மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. இதையடுத்து அதில் நோக்கியாவுடன் நெருங்கிய தொடர்புடைய யேல் வகை நீல நிற எழுத்து மற்றும் கனெக்ட்டிங் பீப்புள் என்ற ஸ்லோகன் நீக்கப்பட்டுள்ளது. இப்புதிய லோகோ இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றாற்போல் மிகவும் நவீனமானதாகும்.

nokia,logo ,நோக்கியா, லோகோ

இதையடுத்து “நாங்கள் எங்கள் யுக்திகளை புதுப்பித்து வருகிறோம், மேலும் இன்று நாங்கள் யார் என்பதை பிரதிபலிக்கும் வகையில் எங்கள் பிராண்டையும் மேம்படுத்துகிறோம்” என நோக்கியா கார்ப்பரேஷனின் தலைவர் பெக்கா லண்ட்மார்க் அவர்கள் கூறினார்.

nokia,logo ,நோக்கியா, லோகோ

மேலும் “பெரும்பாலான மக்களின் மனதில் நாங்கள் இன்னும் ஒரு வெற்றிகரமான மொபைல் ஃபோன் பிராண்டாக இருக்கிறோம், ஆனால் நாங்கள் நெட்வொர்க்குகள் மற்றும் தொழில்துறை டிஜிட்டல் மயமாக்கலில் கவனம் செலுத்தும் புதிய பிராண்டை அறிமுகப்படுத்த விரும்புகிறோம், இது வழக்கமாக பயன்படுத்தப்பட்டுவரும் மொபைல் போன்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டது” எனவும் அவர் கூறினார்.

Tags :
|