Advertisement

பழைய மாடல்களை 4ஜி வசதியுடன் அறிமுகம் செய்யும் நோக்கியா!

By: Monisha Fri, 06 Nov 2020 6:44:25 PM

பழைய மாடல்களை 4ஜி வசதியுடன் அறிமுகம் செய்யும் நோக்கியா!

ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா 8000 மற்றும் நோக்கியா 6300 மாடல்களை 4ஜி வசதியுடன் விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இரண்டு பழைய மாடல்களும் ஸ்வீடன் நாட்டு டெலிகாம் வலைதளத்தில் இருந்து லீக் ஆகி இருக்கிறது.

அதன்படி இரண்டு நோக்கியா மாடல்களிலும் 4ஜி எல்டிஇ வசதி வழங்கப்படுகிறது. 2000 ஆண்டுகளில் மிகவும் பிரபலமான மாடல்களாக நோக்கியா 8000 மற்றும் நோக்கியா 6300 இருந்தன. தற்சமயம் இவை புதுப்பிக்கப்பட்டு 4ஜி வசதியுடன் மீண்டும் அறிமுகமாக இருக்கின்றன.

hmt global,nokia,4g,telecom,wifi calling ,ஹெச்எம்டி குளோபல் நிறுவனம்,நோக்கியா,4ஜி,டெலிகாம்,வைபை காலிங்

டெலிகாம் வலைதள விவரங்களின் படி நோக்கியா 8, நோக்கியா 9, நோக்கியா 4.2, நோக்கியா 3.2, நோக்கியா 5.3, நோக்கியா 7.2, நோக்கியா 2720 ப்ளிப், நோக்கியா 8.3, நோக்கியா 3.4, நோக்கியா 2.4 மற்றும் நோக்கியா 225 4ஜி உள்ளிட்டவை வைபை காலிங் வசதி வழங்கப்படுகிறது.

இதுதவிர சமீபத்திய ஆப்பிள், சாம்சங், ஹூவாய், ஒன்பிளஸ், சியோமி மற்றும் இதர நிறுவன ஸ்மார்ட்போன்களிலும் வைபை காலிங் சேவை வழங்கப்படுகிறது.

Tags :
|
|