Advertisement

பிராட்காம் நிறுவனத்துடன் நோக்கியா புது ஒப்பந்தம்

By: Monisha Wed, 17 June 2020 6:24:40 PM

பிராட்காம் நிறுவனத்துடன் நோக்கியா புது ஒப்பந்தம்

ஃபின்லாந்தை சேர்ந்த நோக்கியா ஸ்மார்ட்போன் பிராண்டு இன்டெல் மற்றும் மார்வெல் நிறுவனங்களை தொடர்ந்து 5ஜி வசதி கொண்ட சிப்செட்களை உருவாக்கி விநியோகம் செய்ய பிராட்காம் நிறுவனத்துடன் ஒப்பந்தமிட்டுள்ளது. இதன் மூலம் நோக்கியாவுடன் இணைந்திருக்கும் மூன்றாவது நிறுவனமாக பிராட்காம் இருக்கிறது.

புதிய ஒப்பந்தத்தின் மூலம் இந்த ஆண்டு இறுதிக்குள் நோக்கியா வெளியிடும் 5ஜி ஸ்மார்ட்போன்களில் சுமார் 35 சதவீதம் மாடல்களில் பிரத்யேக சிப்செட் வழங்க முடியும் என நோக்கியா எதிர்பார்க்கிறது.

nokia,broadcom,5g,smartphone ,நோக்கியா,பிராட்காம் நிறுவனம்,5ஜி,ஸ்மார்ட்போன்

தற்போதைய சந்தை சூழ்நிலை அதிவேகமாக வளர்ந்து வருவதால், நோக்கியா நிறுவனமும் தனது பணிகளை முடுக்கி விடும் நோக்கில் புது நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்து வருகிறது. பிராட்காம் உடனான கூட்டணியில் நோக்கியா நிறுவனம் ASIC தொழில்நுட்பத்தை பயன்படுத்த இருக்கிறது.

இது அதிவேக செயல்பாட்டை வழங்குகிறது. எனினும், கட்டணம் மற்றும் விநியோக சவால்கள் போன்ற காரணங்களால் நோக்கியா ASIC தொழில்நுட்பத்தை பயன்படுத்து எனும் முடிவை எட்டியிருப்பதாக கூறப்படுகிறது.

Tags :
|
|