Advertisement

வாகன ஓட்டிகளுக்கான அறிவிப்பு .. இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

By: vaithegi Wed, 16 Aug 2023 1:38:02 PM

வாகன ஓட்டிகளுக்கான அறிவிப்பு .. இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்


சென்னை : 451-வது நாளாக பெட்ரோல், டீசலின் விலை எவ்வித மாற்றமும் இல்லாமல் பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ. 102.63 ரூபாய்க்கும், டீசலின் விலை ரூ. 94.24 க்கும் விற்பனை ...... பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் சர்வதேச சந்தையில் பெட்ரோல், டீசலின் ஏற்றுமதி, இறக்குமதி போன்றவற்றின் மூலமாகவே உள்நாட்டில் பெட்ரோல், டீசலின் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.

அந்த வகையில் கடந்த 2021 -ம் ஆண்டு நவம்பர் மூன்றாம் தேதி சர்வதேச சந்தையில் ஏற்பட்ட வீழ்ச்சியின் காரணத்தினால் பெட்ரோல், டீசலின் விலை திடீரென உயர்த்தப்பட்டு பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ. 110.85 ரூபாய்க்கும், டீசலின் விலை 102.59 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதன் பின் தமிழகத்தில் கடந்த 2021 இரண்டாம் ஆண்டு மே 21-ம் தேதி பெட்ரோல் மீதான கலால் வரி அடிப்படையில் பெட்ரோல், டீசலின் விலை சற்று குறைக்கப்பட்டது.

petrol,diesel,car drivers ,பெட்ரோல், டீசல்,வாகன ஓட்டிகள்


அதாவது பெட்ரோல் மீதான கலால் வரி அடிப்படையில் 9 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி அடிப்படையில் லிட்டருக்கு 7.5 ரூபாயும் குறைக்கப்பட்டு பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ.102.63 ரூபாய்க்கும் டீசலின் விலைரூ. 94.24 க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதத்தில் பெட்ரோல் டீசலின் விலை குறைக்கப்பட்ட நிலையில் தற்போது வரைக்கும் எவ்வித மாற்றமும் செய்யப்படாமல் கிட்டத்தட்ட 451-வது நாளாக ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 102.63 ரூபாய்க்கும், டீசலின் விலை ரூ.94.24 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Tags :
|
|