Advertisement

வாகன ஓட்டிகளுக்கான அறிவிப்பு ..இன்றைய பெட்ரோல், டீசலின் விலை

By: vaithegi Wed, 19 July 2023 3:45:37 PM

வாகன ஓட்டிகளுக்கான அறிவிப்பு ..இன்றைய  பெட்ரோல், டீசலின் விலை

சென்னை: தமிழகத்தில் 424வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசலின் விலையில் எந்தவித மாற்றமும் செய்யப்படாமல் அதே விலையில் விற்பனை .. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் சர்வதேச சந்தையில் பெட்ரோலின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வீதத்தில் மாற்றங்கள் ஏற்படுவதால் உள்நாட்டில் பெட்ரோல், டீசலின் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.

அந்த வகையில் கடந்த 2021 -ம் ஆண்டு இந்தியாவில் பெட்ரோல், டீசலின் விலை திடீரென அதிகரிக்கப்பட்டு பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ.110. 85 ரூபாய்க்கும், டீசலின் விலை லிட்டருக்கு 102.59ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

petrol,diesel ,  பெட்ரோல், டீசல்

இதன் பின் கடந்த 2021 -ம் ஆண்டு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி அடிப்படையில் பெட்ரோல், டீசலின் விலை குறைக்கப்பட்டது. அதாவது, பெட்ரோலின் விலை லிட்டருக்கு 102.63 ரூபாய்க்கும், டீசலின் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இதன் பின்னர், பெட்ரோல், டீசலின் விலை எந்த வித மாற்றமும் செய்யப்படாமல் தற்போது வரையிலும் அதே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதாவது, சென்னையில் இன்று 424-வது நாளாக விலை மாற்றம் செய்யப்படாமல் பெட்ரோலின் விலை லிட்டருக்கு 102.63 ரூபாய்க்கும், டீசலின் விலை லிட்டருக்கு 94.24 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Tags :
|