Advertisement

நவம்பர் மாத கேஸ் சிலிண்டர் விலை நிலவரம்

By: vaithegi Sat, 11 Nov 2023 4:55:34 PM

நவம்பர் மாத கேஸ் சிலிண்டர் விலை நிலவரம்

சென்னை: சிலிண்டர் எரிவாயு விலை ... சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏற்ற இறக்கங்களை பொறுத்து எல்பிஜி விலையானது மாதம் தோறும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.

இதையடுத்து மாத தொடக்கத்தில் எல்பிஜி விலை நிலவரங்கள் மாற்றத்திற்கு உட்பட்டு அறிவிக்கப்படுகிறது. மத்திய அரசு ஆண்டுக்கு 12 சிலிண்டர்கள் வீதம் பொதுமக்களுக்கு மானிய விலையில் கேஸ் சிலிண்டர்களை வழங்கி கொண்டு வருகிறது.

gas cylinder price,market,crude oil price ,கேஸ் சிலிண்டர் விலை,சந்தை, கச்சா எண்ணெய் விலை

தற்போது நவம்பர் மாத நிலவரப்படி சென்னையில் வீட்டு உபயோகத்திற்கான 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டர் எரிவாயு ரூபாய் 918.50-க்கும், வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலை ரூபாய் 1999 .50 பைசாவிற்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் சிலிண்டர் விலை ஏற்ற இறக்கங்கள் அனைத்தும் பொதுமக்களை நேரடியாக பாதிக்கும் நிலைவுள்ளதால் பொதுமக்கள் சிலிண்டர் விலை பற்றிய அறிக்கைகளை மிகவும் உன்னிப்பாக கவனித்து கொண்டு வருகின்றனர்.

Tags :
|