Advertisement

மே 29ம் தேதி முதல் இந்திய சந்தையை கலக்க வருது ஒன் பிளஸ் 8 சீரிஸ் ஸ்மார்ட் போன்

By: Nagaraj Fri, 15 May 2020 5:19:47 PM

மே 29ம் தேதி முதல் இந்திய சந்தையை கலக்க வருது ஒன் பிளஸ் 8 சீரிஸ் ஸ்மார்ட் போன்

ஒன்பிளஸ் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ஒன்பிளஸ் 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் இந்திய விற்பனை தேதி மே 29 என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஃபிளாக்ஷிப் ஒன்பிளஸ் 8 மற்றும் ஒன்பிளஸ்8 ப்ரோ ஸ்மார்ட்போன்களை சில வாரங்களுக்கு முன் நடைபெற்ற ஆன்லைன் நிகழ்வில் அறிமுகம் செய்தது. ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்சமயம் இவற்றின் இந்திய விற்பனை தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் ஒன்பிளஸ் 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் மே 29 ஆம் தேதி அமேசான் மற்றும் விற்பனை மையங்களில் விற்பனைக்கு வருகிறது. இதனை ஒன்பிளஸ் தனது ரெட் கேபிள் கிளபில் அறிவித்துள்ளது. இந்திய சந்தையில் ஒன்பிளஸ் 8 சீரிஸ் விலை ரூ. 41,999 துவங்கி டாப் எண்ட் ஒன்பிளஸ் 8 ப்ரோ விலை ரூ. 59,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

one plus,highlights,sale date,bluetooth ,ஒன் பிளஸ், சிறப்பம்சங்கள், விற்பனை தேதி, ப்ளூடூத்

ஒன்பிளஸ் 8 சிறப்பம்சங்கள்

- 6.55 இன்ச் 1080x2400 பிக்சல் FHD+ 402 ppi 20:9 ஃபிளுயிட் AMOLED டிஸ்ப்ளே
- 3D கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு
- 2.84 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர்
- அட்ரினோ 650 GPU
- 8 ஜிபி LPDDR4X ரேம், 128 ஜிபி UFS 3.0 மெமரி
- 12 ஜிபி LPDDR4X ரேம், 256 ஜிபி UFS 3.0 மெமரி
- ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஆக்சிஜன் ஒஎஸ் 10.0
- டூயல் சிம்
- 4300 எம்ஏஹெச் பேட்டபி
- ராப் சார்ஜ் 30T ஃபாஸ்ட் சார்ஜிங் என்று ஏராளமான சிறப்பம்சங்களுடன் களம் இறங்குகிறது. இதனால் ஸ்மார்ட்போன் ரசிகர்கள் வெகுவாக எதிர்பார்த்துள்ளனர்.

Tags :