Advertisement

புதிய ஸ்மார்ட்போனை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்ய ஒன்பிளஸ் நிறுவனம் திட்டம்!

By: Monisha Tue, 25 Aug 2020 6:00:04 PM

புதிய ஸ்மார்ட்போனை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்ய ஒன்பிளஸ் நிறுவனம் திட்டம்!

ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போனினை சற்றே குறைந்த விலையில் கடந்த மாதம் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போனில் பிரீமியம் ஃபிளாக்ஷிப் மாடலில் இருந்ததை விட சற்றே குறைவான அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

இந்த வரிசையில் ஒன்பிளஸ் நிறுவனம் மற்றொரு புதிய ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த மாடல் தவிர ஒன்பிளஸ் நிறுவனம் பல்வேறு புதிய மாடல்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 662 அல்லது குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய பட்ஜெட் ரக ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் செப்டம்பர் மாத இறுதியில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது.

ஒன்பிளஸ் உருவாக்கி வரும் புதிய பட்ஜெட் ரக ஸ்மார்ட்போனின் விலை ரூ. 16 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 18 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் பிராசஸர் தவிர வேறு எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

Tags :