Advertisement

கடந்த சில வாரமாக வெங்காயம் விலையானது உச்சம்

By: vaithegi Fri, 17 Nov 2023 2:11:36 PM

கடந்த சில வாரமாக வெங்காயம் விலையானது உச்சம்


சென்னை: இன்று (நவ. 17) வெங்காயம் விலை ரூ. 75க்கு விற்பனை ..தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் காய்கறி வரத்து குறைந்து உள்ளது. அந்த வகையில் சென்னை கோயம்பேடு சந்தைக்கு வெளிமாநிலங்களிலிருந்து காய்கறி கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகிறது.

இதையடுத்து அதில் கடந்த மாதம் மகாராஷ்டிராவில் நாசிக் பகுதிகளிலிருந்து வரும் வெங்காயத்தின் வரத்து குறைவாக இருந்தது. அதனால் விலையானது கடுமையாக உயர்ந்து 1 கிலோ வெங்காயம் ரூ. 90வரை விற்பனை செய்யப்பட்டது.

onion,koyambedu,chennai,for sale ,வெங்காயம் ,சென்னை கோயம்பேடு ,விற்பனை

அதன் பின்னர் வரத்து உயர்ந்தால் விலை கட்டுப்பாட்டிற்குள் வந்தது. இந்த நிலையில் மீண்டும் வெங்காய வரத்து கோயம்பேடு சந்தையில் குறைத்ததை அடுத்து வெங்காயம் விலை அதிகரித்து உள்ளது.

அதாவது 1 கிலோ வெங்காயம் ரூ.60க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை விற்பனை கடைகளில் வெங்காயம் கிலோ ரூ. 70 முதல் ரூ. 75 வரை விற்பனை செய்யப்படுகிறது. அதே போன்று சின்ன வெங்காயம் விலை மொத்த விற்பனையில் ரூ.90க்கும், சில்லறை விற்பனையில் ரூ.110 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Tags :
|