Advertisement

சின்ன வெங்காயம் விலை மீண்டும் அதிகரிப்பு

By: vaithegi Sat, 25 Nov 2023 10:45:51 AM

சின்ன வெங்காயம் விலை மீண்டும் அதிகரிப்பு

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு இடங்களில் மழை பெய்து கொண்டு வருகிறது. அதனால் காய்கறி வரத்து குறைந்து உள்ளது. அந்த வகையில் சின்ன வெங்காயம் வரத்து குறைவாக இருந்ததால் விலை அதிகமாக விற்பனை செய்யப்பட்டது.

இதனை அடுத்து 1 கிலோ வெங்காயம் ரூ.110 வரை விற்பனை செய்யப்பட்டதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சியில் இருந்தனர். பின் கடந்த வாரம் வரத்து அதிகரித்ததால் வெங்காயம் விலை குறைந்தது.

small onion,sale , சின்ன வெங்காயம்,விற்பனை

1 கிலோ வெங்காயம் ரூ. 80க்கு விற்பனை செய்யப்பட்டதால் இல்லத்தரசிகள் நிம்மதி அடைந்தனர். ஆனால் இன்று (நவ. 24) சின்ன வெங்காயம் விலை மீண்டும் அதிகரித்து உள்ளது.

எனவே அதன் படி மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ ரூ. 90க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போன்று வெளி மார்க்கெட்டில் வெங்காயம் விலை 1 கிலோ ரூ.110 வரை விற்பனை செய்யப்படுவதால் மக்கள்பெரும் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.

Tags :