Advertisement

இந்தியா சந்தையில் ஒப்போ ஏ52 ஸ்மார்ட்போன் அறிமுகம்!

By: Monisha Fri, 19 June 2020 6:05:11 PM

இந்தியா சந்தையில் ஒப்போ ஏ52 ஸ்மார்ட்போன் அறிமுகம்!

ஒப்போ நிறுவனத்தின் ஏ52 ஸ்மார்ட்போன் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஒப்போ ஏ52 ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் FHD+ எல்சிடி ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர், 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

புகைப்படங்களை எடுக்க 12 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு சென்சார், 2 எம்பி மேக்ரோ மற்றும் 2 எம்பி டெப்த் சென்சார் மற்றும் 16 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

oppo,a52 smartphone,india,selfie camera,memory ,ஒப்போ,ஏ52 ஸ்மார்ட்போன்,இந்தியா,செல்ஃபி கேமரா,மெமரி

ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் மற்றும் கலர்ஒஎஸ் 7.1 கொண்டிருக்கும் ஒப்போ ஏ52 ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 5000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 18வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் யுஎஸ்பி டைப்-சி வழங்கப்பட்டுள்ளது.

ஒப்போ ஏ52 ஸ்மார்ட்போன் டுவிலைட் பிளாக் மற்றும் ஸ்டீம் வைட் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 16990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒப்போ ஏ52 ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட், அமேசான் மற்றும் ஆஃப்லைன் விற்பனை மையங்களில் கிடைக்கிறது.

Tags :
|
|