Advertisement

ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்2 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம்!

By: Monisha Thu, 18 June 2020 6:13:15 PM

ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்2 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம்!

ஒப்போ நிறுவனம் இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஃபைண்ட் எக்ஸ்2 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது.

புதிய ஃபைண்ட் எக்ஸ்2 மற்றும் ஃபைண்ட் எக்ஸ்2 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்களில் 6.7 இன்ச் QHD+ OLED ஸ்கிரீன், 120 ஹெர்ச்ஸ் ரிஃப்ரெஷ் ரேட், ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர், 5ஜி வசதி, அதிநவீன லிக்விட் கூலிங் சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது. ஃபைண்ட் எக்ஸ்2 மாடலில் 12 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 3செமீ மேக்ரோ மோட், 13 எம்பி டெலிபோட்டோ கேமரா, 5x ஹைப்ரிட் ஜூம் மற்றும் 20x டிஜிட்டல் ஜூம் வசதி கொண்டுள்ளது.

compare,find x2,find x2 pro,smartphone,indian market ,ஒப்போ,ஃபைண்ட் எக்ஸ்,ஃபைண்ட் எக்ஸ்2 ப்ரோ,ஸ்மார்ட்போன்,இந்திய சந்தை

ஃபைண்ட் எக்ஸ்2 ப்ரோ மாடலில் 48 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 3 செமீ மேக்ரோ, 13 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா, 10x ஹைப்ரிட் ஜூம், 60x டிஜிட்டல் ஜூம் வழங்கப்பட்டுள்ளது. இரு ஸ்மார்ட்போன்களிலும் 32 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்2 ஸ்மார்ட்போன் செராமிக் பிளாக் மற்றும் ஓசன் கிளாஸ் நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 64990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஃபைண்ட் எக்ஸ்2 ப்ரோ ஸ்மார்ட்போன் செராமிக் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை இதுவரை அறிவிக்கப்படவில்லை.

Tags :