Advertisement

ஒப்போ வாட்ச் மாடல் சர்வதேச சந்தையில் விரைவில் அறிமுகம்!

By: Monisha Sat, 25 July 2020 6:00:28 PM

ஒப்போ வாட்ச் மாடல் சர்வதேச சந்தையில் விரைவில் அறிமுகம்!

ஒப்போ நிறுவனம் தனது ஒப்போ வாட்ச் மாடலை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. வியர் ஒஎஸ் கொண்ட ஒப்போ வாட்ச் மாடல் ஜூலை 31 ஆம் தேதி சர்வதேச சந்தையில் அறிமுகமாகும் என ஒப்போ நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. இதுகுறித்து ஒப்போ வெளியிட்ட டீசரில் உள்ள வாட்ச் பார்க்க சீன சந்தையில் வெளியான மாடல் போன்றே காட்சி அளிக்கிறது.

ஒப்போ வாட்ச் மாடலில் AMOLED டிஸ்ப்ளே, 41எம்எம் மற்றும் 46எம்எம் என இரு மாடல்களில் கிடைக்கிறது. இவற்றில் முறையே 1.6 மற்றும் 1.9 இன்ச் டிஸ்ப்ளேக்கள் வழங்கப்பட்டுள்ளன.

oppo,smart watch,international market,stainless steel ,ஒப்போ,ஸ்மார்ட் வாட்ச்,சர்வதேச சந்தை,ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்

புதிய ஒப்போ ஸ்மார்ட்வாட்ச் மாடலில் பிரீமியம் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் எடிஷனும் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் குவால்காம் ஸ்னாப்டிராகன் வியர் 2500 சிப்செட் கொண்டு இயங்குகிறது. புதிய ஸ்மார்ட்வாட்ச் கூகுள் வியர் ஒஎஸ் இயங்குதளம் கொண்டிருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

புதிய ஒப்போ வாட்ச் மாடலில் வியர் ஒஎஸ் 4100 வழங்கப்படுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. இது ஸ்மார்ட் வாட்ச் பேட்டரி பேக்கப் நேரத்தை அதிகமாக வழங்கும் திறன் கொண்டது ஆகும். ஒப்போ வாட்ச் மாடலில் வாட்ச் வூக் ஃபிளாஷ் சார்ஜ் தொழில்நுட்பம் வழங்கப்படுகிறது. இது பேட்டரியை 1 முதல் 50 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 17 நிமிடங்களை எடுத்துக் கொள்கிறது.

Tags :
|