Advertisement

மலேசியாவில் நாளை ஓப்போ நிறுவனம் தனது ஏ53 ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்துகிறது

By: Nagaraj Mon, 24 Aug 2020 10:41:39 AM

மலேசியாவில் நாளை ஓப்போ நிறுவனம் தனது ஏ53 ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்துகிறது

நாளை மலேசியாவில் ஓப்போ ஏ53 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படுகிறது.

ஓப்போ நிறுவனம் ஓப்போ ஏ53 ஸ்மார்ட்போனை சமீபத்தில் இந்தோனேசியாவில் அறிமுகம் செய்தது, இந்த நிலையில் இந்த ஸ்மார்ட்போனை மலேசியாவில் நாளை 25 ஆம் தேதி வெளியிட உள்ளது.

ஒப்போ ஏ53 ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் 1600×720 பிக்சல் ஹெச்டி பிளஸ் எல்சிடி ஸ்கிரீன் கொண்டதாக உள்ளது, மேலும் பிராசஸர் பொறுத்தவரை ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 460 பிராசஸர் கொண்டுள்ளது.

oppo,fingerprint sensor,bluetooth 5,battery size ,ஓப்போ, கைரேகை சென்சார், ப்ளூடூத் 5, பேட்டரி அளவு

மேலும் இது அட்ரினோ 610 ஜிபியு வசதியினைக் கொண்டதாகவும், மெமரி அளவினைப் பொறுத்தவரை 4 ஜிபி LPDDR4x ரேம், 64 ஜிபி மெமரி கொண்டதாகவும் மேலும் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி கொண்டதாக உள்ளது.

மேலும் ஆண்ட்ராய்டு 10 மற்றும் கலர் ஒஎஸ் 7.2 வசதி கொண்டதாகவும் கேமராவைப் பொறுத்தவரை 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த் சென்சார், 2 எம்பி மேக்ரோ சென்சார் போன்றவற்றினையும், முன்புறத்தில் 16 எம்பி செல்ஃபி கேமராவையும் கொண்டுள்ளது.

பின்புறத்தில் கைரேகை சென்சார் கொண்டதாகவும், மேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யுஎஸ்பி டைப் சி போன்றவற்றினைக் கொண்டதாகவும் உள்ளது. பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாகவும் உள்ளது.

Tags :
|