Advertisement

தொடர் சரிவில் ஆபரணத் தங்கம்

By: vaithegi Mon, 27 Feb 2023 12:09:49 PM

தொடர் சரிவில் ஆபரணத் தங்கம்

சென்னை: எந்த அணிகலன்கள் அணிந்தாலும் தங்க அணிகலன்களுக்கு எப்பொழுதும் மவுசு கொஞ்சம் அதிகம் தான். மக்களும் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்கின்றனர். தங்கத்தின் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கம் காணப்படுவதுண்டு.

அந்தவகைலயில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் மீண்டும் குறைந்துள்ளது. சென்னையில் இன்றைய தங்கம் வெள்ளி விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.

gold,silver ,தங்கம் ,வெள்ளி

அந்தவகையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ரூபாய் 5201.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 80 குறைந்து ரூபாய் 41608.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5563.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 44504.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 100 காசுகள் குறைந்து ரூபாய் 69.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 69000.00 எனவும் விற்பனையாகி கொண்டு வருகிறது

Tags :
|