Advertisement

ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ. 600 உயர்வு

By: vaithegi Sat, 22 Oct 2022 9:35:43 PM

ஆபரண தங்கத்தின்  விலை இன்று சவரனுக்கு ரூ. 600 உயர்வு

சென்னை: இன்று ஆபரண தங்கம் விலை உயர்வு ..... தற்போது டாலரின் மதிப்பு உயர்ந்துள்ளதால் தங்கம் விலையும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போரின் விளைவால் கச்சா எண்ணெய், தங்கம் விலை மிக கடுமையாக உயர்ந்து வருகிறது. மேலும் பங்குச்சந்தையும் சரிந்து கொண்டு வருகிறது.

இதுவும் தங்கத்தின் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. இந்நிலையில் மத்திய அரசு தங்கத்திற்கான இறக்குமதி விதியை அதிகரித்தது. இந்த இறக்குமதி விதி அதிகரித்த ஒரு வாரத்தில் மட்டும் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 1000 ரூபாய் வரை உயர்ந்து.

gold price,chennai ,தங்கம் விலை,சென்னை

சென்னையில் 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600 அதிகரித்து ரூ.37.920-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.75 உயர்ந்ள்ளது. ரூ.4.740-க்கு விற்பனைசெய்யப்பட்டுகிறது.
தீபாவளி பண்டிகையையொட்டி தங்கம் வாங்குவதர்க்கு அதிகரித்துள்ள நிலையில் தங்கம் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1.70 சதவீதம் உயர்ந்து ரூ.63.20-க்கு விற்பனை செய்யப்பட்டுகிறது.

Tags :